புதன், 29 பிப்ரவரி, 2012

சர்வாதிகாரம் நடுவீட்டில்

Chandrasiri coordinated demo in Jaffna



ஜனநாயக நாட்டின்
நாடகங்கள் கூட
நிர்ப்பந்தத்தால்
நடிக்கப்படுகின்றன
சர்வாதிகாரம்
நடுவீட்டில்
யார் என்ன செய்யமுடியும்?

ஒரு நாடு ஒரு இனம்



வெருட்டி,எழுதி தந்து
சுலோகங்களை பிடிக்கச் சொல்கிறார்
சிங்களரும் அடிவருடிகளும்
நாம் என்ன செய்ய முடியும்?
ஒரு நாடு ஒரு இனம் 

புதன், 22 பிப்ரவரி, 2012

கூலிக்கு கழுவுகிறான் கூலி







என்னடா கேவலம் இது?
தமிழனுக்கு எதிராய் 
   தமிழன் என்று சொல்பவன் 
   சாட்சி சொல்ல ஜெனிவா போகிறான் ?
   மகிந்தவின் இரத்தக்கறையை 
   கூலிக்கு கழுவுகிறான் கூலி   




e

சனி, 18 பிப்ரவரி, 2012

விழிகள் நனையும் பொழுது நீண்டு போயிற்று




 





கிளிகள் பாடும் வாழ்வு
கீற்றாய் கிழிந்து போயிற்று
கிளிகள் வாழ்ந்த கூடு
நாராய் தூர்ந்து போயிற்று
விழிகள் நனையும் பொழுது
நீண்டு போயிற்று 

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

மலையோரம் வீசும் காற்று







மலையோரம் வீசும் காற்று
கடலோரம் தாவும் அலைகள்
வயலோரம் தழுவும் பசுங்காட்சி
கோவிலில் கேட்கும் மணியோசை
கிராமத்தை தாலாட்டும் தென்றல்
இழந்ததில் இவையும் 

புதன், 15 பிப்ரவரி, 2012

மீண்டும் மனிதனிலிருந்து குரங்கு வருமா?( இது 350 வது பதிவு )







குரங்கில் இருந்து மனிதன் வந்து
செய்த கொடுமைகள் போதும் என்று
மீண்டும்
மனிதனிலிருந்து
குரங்கு வருமா?
குரங்கு கூர்ப்பில் உயர்ந்ததா?
மனிதம் செத்து
களவற்ற மனம் உயிர்க்குமா?

மனித கொடுமையை
குரங்கு பாவமாய் சுமப்பதா?

அழிவுதான் பெரிதாகப்போகிறது















துள்ளித்திரிந்த வாழ்வு
உயிரைக் காக்க உரத்துக்கத்தியும்
உலகம் சேர்ந்து
எங்களை விழுங்கிற்று
எத்தனை காலம்
எமை பயமுறுத்தி வாழ்வர்
இவ்விஞ்ஞானஉலகில்
அழிவுதான் பெரிதாகப்போகிறது   

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இயற்கையின் இருப்பே வாழ்க்கையின் இழை





இயற்கையின் இருப்பே 
வாழ்க்கையின் இழை
இயற்கையை 
மனிதன் அழிக்கிறான்
தான் அழிவதற்காய்.  

சனி, 11 பிப்ரவரி, 2012

வாழ்க்கை விசித்திரமானது





வாழ்க்கை விசித்திரமானது 
வசதிகள் 
மனிதர்களுக்குள் 
வேற்றுமையை விதைக்கின்றன 
மனிதர்கள் இறப்பார்கள் 
என்று 
மனிதர்களுக்கு தெரிந்தும் 
மனிதனின் ஆசைக்கு 
அளவு இல்லை 

இவர்களின் கனவு ஒருநாள் நனவாகாமல் போகாது



தமிழன் தளரா முயற்சியின் 
நவீன வடிவம் 
விழ விழ எழும் மனிதம் 
உழைப்பின் உச்சத்திலும் 
இழப்பின் உச்சத்திலும் 
தளராதவன் 
இவர்களின் கனவு 
ஒருநாள் நனவாகாமல் போகாது 

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

எப்போதும் எம்மினம் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது











வாழ்வு குறுகியது 
முயற்சி ஒன்றே 
எமை தக்கவைக்கும் 
எப்போதும் 
எம்மினம் பற்றி 
சிந்திக்கவேண்டியிருக்கிறது 
இனத்தை காக்க 
வேண்டிய பொறுப்பு 
மனிதர்களிடம் ஒட்டியிருக்கிறது 
இனி அவரவர் பொறுப்பு   

ஊன்று கோல் தரும் புனர்வாழ்வு








பறந்த வாழ்வை இழந்து 
தங்கி வாழும் செத்த வாழ்வு 
சிறகடிக்கும் மகிழ்வை பறித்து 
ஊன்று கோல் தரும் புனர்வாழ்வு   

வியாழன், 9 பிப்ரவரி, 2012

காலை விடிவது மனிதருக்கு மட்டுமல்ல.










அழகில் அமிழாத மனம் உண்டோ?
சுதந்திரம் கிடைப்பின் 
வாழ்வு இப்படி இருக்கும்.
காலை விடிவது மனிதருக்கு மட்டுமல்ல. 

சனி, 4 பிப்ரவரி, 2012

தான் வாழ்ந்தால் போதும் என ஆசைப்படும் நர உலகம்


சமத்துவம் அற்ற உலகம் 
அதிகாரம் செலுத்த,
தட்டிப்பறித்து 
தான் வாழ்ந்தால் போதும் என 
ஆசைப்படும் நர உலகம் 
தான் வாழ காட்டிக்கொடுக்கும் 
கீழ் உலகம் 
மனிதம் பேசியே 
மனிதனைக்கொல்லும் 
மாய உலகம்