வியாழன், 26 செப்டம்பர், 2013

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே

வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

பொதுபலசேனாவின் தலைவன்
கோத்தா
பாதாள கோஷ்டிகளின் தலைவனும்
அவனே
நாட்டில் குற்றச்செயல்களின்
ஆணிவேரே இவன்தான்
எல்லாம்
மகிந்தவின் ஆசியுடன்

திங்கள், 23 செப்டம்பர், 2013

தமிழ் ஆட்சி மலர்ந்தது





வடமாகானசபை தேர்தல் முடிந்தது
தமிழர் ஆட்சி மலர்ந்தது
அட்டூழியர்
கொட்டம் அடங்கிற்று
தியாகம் செய்தவர் நினைவில்
நாடு வாழும்
அசரீரி கேட்கிறது  

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழர் உயிரை பணயம் வைத்து புலம்பெயருகின்றனர்

boat_people

தமிழனின் வாழ்நிலம்
அழகானது,வளமானது
இன்று
சிங்கள அட்டூழியத்தால்
தமிழர் அகதியாகின்றனர்
உயிரை பணயம் வைத்து
புலம்பெயருகின்றனர்
சிங்களவர் தின்ற உயிர்களில்
கடலில் கரைந்த உயிர்களும் சேரும்
அகதிவாழ்வின் கொடுமை
அனுபவித்தாலே புரியும் 

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நவீன துட்டகைமுனுக்கள்

வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தை அடக்க இராணுவத்தை வரவழைத்த காவற்துறை அதிகாரி யார்?



ராஜபக்சர்களின் அராஜகம்
குடிதண்ணீரில் மட்டுமல்ல
பள்ளிவாசல்களிலும் வியாபித்துள்ளது
நவீன துட்டகைமுனுக்கள்
இடியமீனையும் சாப்பிடுகிறார்கள்
காவியுடையுடன்,
கழுத்தில் சிவப்புத்துண்டுடன்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நான் ஏன் என்று கேட்கவில்லை



அடுத்த இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
என் இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
அயலவனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
இன்று
என் சகோதரனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
நாளை----?

புதன், 17 ஜூலை, 2013

படு கொலைக்குற்றம்







படு கொலைக்குற்றம்
அதிகம் உள்ளவன்
அடுத்தவனை
கௌரவிக்கிறான்
நவீன உலகில்
எல்லாம் சாத்தியமாகிறது   

ஞாயிறு, 26 மே, 2013

WAR JOURNEY

மலரவனின் போர் உலா என்ற பயனக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பென்குயின் பதிப்பகத்தால் WAR JOURNEY என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.ஏற்கனவே போர் உலா என்ற நூல் ஐந்து தடவைகள் அச்சிடப்பட்டு வெளியாகியிருந்தது.போர் உலா இலங்கை இலக்கியப்பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான  இலக்கியத்தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றது.இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவம் கட்டைக்காட்டில் இருந்து ஆனையிறவு முகாம் நோக்கி இராணுவ நடவடிக்கையின் (பலவேகயா 2- 1992) இராணுவ ஆய்வை மலரவன் செய்யப்பணிக்கப்பட்டு   அவன் அதை பூர்த்தி செய்திருந்தான்.
அந்த ஆய்வு மிக அழகாக செய்யப்பட்டிருந்ததாக தலைவர் அவர்களால் சொல்லப்பட்டது.இராணுவம்,புலிகளின் பலம் பலவீனம் அவ்ஆய்வில் வெளித்தெரிவதால் அந்த ஆவணம் நூல் ஆக்கப்படவில்லை. மலரவன்  யாழ் மாவட்ட இராணுவ அறிக்கைப்பொறுப்பாளனாய்  நியமிக்கப்பட்டான்.


சு.செல்வி   

வியாழன், 10 ஜனவரி, 2013

இம்மியளவும் ரோசமில்லை

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் - பத்திரிகைகளும் எரிப்பு


இன்று உதயன் பத்திரிகை
விநியோக ஊழியன்
தாக்கப்பட்டான்
சிங்களத்தால் வளர்க்கப்படும்
ஒட்டுக்குழுவால்
நேற்று பள்ளிவாசல்
தாக்கப்பட்டது சிங்களத்தால்
இருந்தும் ஒட்டி உறவாடும்
பஞ்சமிகளுக்கு
இம்மியளவும் ரோசமில்லை  

சனி, 5 ஜனவரி, 2013

சிங்கள, ஒட்டுக்குழு ஆட்சி

Photo: 4 வயது சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


சிங்கள, ஒட்டுக்குழு ஆட்சியில்
என்ன எல்லாம் நடக்கிறது
மனித வாழ்க்கை
உச்சகொடுமை அனுபவிக்கிறது