செவ்வாய், 12 ஜூலை, 2011

ஒரு பரம்பரையின் மூன்று தலை முறை எழுத்தாளர்கள்

ஈழத்தில் ஒரே பரம்பரையில் தோன்றிய வேறு
மூன்று தலை முறை எழுத்தாளர்கள் உளரோ வென 
என் அறிவுக்குத் தெரியவில்லை 
கச்சாயில் இரத்தினம் இலங்கையின் மூத்த 
எழுத்தாளர் .    இவரது நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட சிறு கதைகள் இலங்கை,
இந்திய பத்திரிகை,வானொலி,சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக்கிறது.
இவற்றுள் தொடர் 
கதைகளும்,அடங்கும்.
இவரது நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் இலங்கை 
வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.தொடர் நாடகங்களும் அடங்கும்.இலங்கை தமிழ் 
வானொலியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நிறைவில் பேராசிரியர் 
சிவத்தம்பி அவர்கள் வானொலி நாடகங்களின் அதிக பங்களித்தவர்களில் 
நால்வரில் ஒருவராக இவரையும் குறிப்பிட்டுள்ளார்.   
இவர் பல மேடை நாடகங்களையும் எழுதி,இயக்கி மேடை ஏற்றியுள்ளார்.
இவர் பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.இலவு காத்த கிளி என்ற கதை அகில இலங்கை ரீதியில்
முதற் பரிசு பெற்றது.கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார்.இவர் 
ஆர்மோனியம்,புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராய்த் திகழ்ந்தார்.
திரைச் சீலையில் ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார்.
பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (சிறுகதைகள்),வன்னியின் செல்வி 
( நாவல்) நூலுருப்பெற்றுள்ளன.

இவரது மகளான மலரன்னை அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக 
பலராலும் அறியப்பட்டுள்ளார்.இவரது எழுபதிற்கும் மேற்பட்ட 
சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள் ,வானொலிகள் ,சஞ்சிகைகளில் 
உள்,வெளி நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.முப்பத்தைந்திட்கும் மேற்பட்ட 
வானொலி நாடகங்கள் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன.
பத்து ஆங்கிலக்கவிதைகள் ஆங்கிலப்பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. 
இவரது இருபத்தி மூன்று ஆக்கங்கள் பரிசு பெற்றிருக்கின்றன.மூன்று 
தடவைகள் சர்வதேச அளவில் நடை பெற்ற போட்டிகளில் பரிசு 
பெற்றுள்ளார்.சித்திரன்,மல்லிகை சிறுகதைப்போட்டிகளிலும்
அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். இவர் ஓவியம்,ஒளிப்படம் 
முதலிய வற்றிலும் ஈடு பாடு உடையவர்.  இவர் சில மொழி பெயர்ப்புகளையும் செய்துள்ளார். 

மலரவன் இவன் மலரன்னை அவர்களின் இளைய மகன்.இவன் 
இப்போது உயிரோடு இல்லை.இவனது நாலு நூல்கள் வெளியாகி 
பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய 
பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல்
பரிசு பெற்றது. இதுவரை மூன்று பதிப்புகளை பெற்றுள்ளது.
போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி 
ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு)
மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது 
ஹைக்கூ தொகுப்பாகும்)
புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது. 

1 கருத்து:

  1. மலரவனின் சகோதரனும் ஒரு
    எழுத்தாளர் .அவர் சுஜந்தன்,சுஜோ,
    சுருதி ஆகிய புனைப்பெயர்களில்
    எழுதிவருகிறார்.

    பதிலளிநீக்கு