வியாழன், 3 மார்ச், 2011

காலத்திற்கு காலம் சொல்லப்படும் கதை.

நடந்ததை மறந்துவிடுவோம்
நாளையைப்பார்ப்போம்.
காலத்திற்கு காலம்
சொல்லப்படும் கதை.
நடந்ததை மறக்க
இல்லாமல் போனது
பூசணி,புடல் அல்ல.
கால் கைகள்
சித்தம்,உயிர்.
மானம் விற்ற சுயநலங்கள் 
சிங்களனோடு,
தர்மம் ஒருநாள் 
தன் மொழியில் பேசும்:பொறு.

                                                   -செல்வி-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக