வன்னி மகள் பாடுகிறாள்
வாழ்விழந்து வாடுகிறாள்
அரவணைக்க தந்தையில்லை
அமுதூட்ட தாயுமில்லை
அன்புதர அண்ணன் இல்லை
யாருமற்று என்ன செய்வாள்
(வன்னி)
முள்ளி வாய்க்கால் கொள்ளியிட
பள்ளி இழந்தது எங்கள் நிலம்
வெள்ளி விழப்பார்த்து விட்டால்
கள்ளி மரம் நாம் பார்ப்போம்
வெள்ளிமட்டும் விழுகிறதே
கள்ளி மரம் எங்கும் இல்லை
(வன்னி)
குருவிகள் வாழ்ந்த கூடு -இன்று
கருகிப்போனது பாரு
அருவிகள் ஓடும் காடு-இன்று
கிருமிகள் வாழும் இடுகாடு
தேனும் மயிலும் வாழ்ந்த பூமி
தேரும் ஊரும் சேர்ந்த சாமி-இன்று
பாம்புகள் நெளியும் உடலமாடா-எங்கும்
பல் இளிக்கும் சடலமடா
பிறவிகள் போதும் பிறவிகள் போதும்
உறவுகள் தொலைந்த பிறவிகள் போதும்
(வன்னி)
உயிர் கயிறாக திரிகின்ற காலம்
தீ காற்றாய் வீசும் ஓலம்
குருத்துவிட குருத்துவிட
பயிர் அழிகின்ற கோலம்
பார்த்திருக்க பார்த்திருக்க
நிலம் பறிபோகும் அவலம்
(வன்னி)
-செல்வி-
வாழ்விழந்து வாடுகிறாள்
அரவணைக்க தந்தையில்லை
அமுதூட்ட தாயுமில்லை
அன்புதர அண்ணன் இல்லை
யாருமற்று என்ன செய்வாள்
(வன்னி)
முள்ளி வாய்க்கால் கொள்ளியிட
பள்ளி இழந்தது எங்கள் நிலம்
வெள்ளி விழப்பார்த்து விட்டால்
கள்ளி மரம் நாம் பார்ப்போம்
வெள்ளிமட்டும் விழுகிறதே
கள்ளி மரம் எங்கும் இல்லை
(வன்னி)
குருவிகள் வாழ்ந்த கூடு -இன்று
கருகிப்போனது பாரு
அருவிகள் ஓடும் காடு-இன்று
கிருமிகள் வாழும் இடுகாடு
தேனும் மயிலும் வாழ்ந்த பூமி
தேரும் ஊரும் சேர்ந்த சாமி-இன்று
பாம்புகள் நெளியும் உடலமாடா-எங்கும்
பல் இளிக்கும் சடலமடா
பிறவிகள் போதும் பிறவிகள் போதும்
உறவுகள் தொலைந்த பிறவிகள் போதும்
(வன்னி)
உயிர் கயிறாக திரிகின்ற காலம்
தீ காற்றாய் வீசும் ஓலம்
குருத்துவிட குருத்துவிட
பயிர் அழிகின்ற கோலம்
பார்த்திருக்க பார்த்திருக்க
நிலம் பறிபோகும் அவலம்
(வன்னி)
-செல்வி-
வன்னி மகள் பாட்டு
பதிலளிநீக்குஉண்மையை சொல்லும் பாட்டு...
Super......
ஆழமான வரிகள்
பதிலளிநீக்குநெஞ்சை தொடும் வலி சுமந்த வரிகள்
பதிலளிநீக்குபிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று கடைசிமட்டும் இலட்சியத்துடன் இருந்தவர்களுக்கு அஞ்சலிகள்
பதிலளிநீக்குஉயிர் கயிறாக திரிகின்ற காலம்
பதிலளிநீக்குதீ காற்றாய் வீசும் ஓலம்
குருத்துவிட குருத்துவிட
பயிர் அழிகின்ற கோலம்
பார்த்திருக்க பார்த்திருக்க
நிலம் பறிபோகும் அவலம்