வெள்ளி, 11 மே, 2012

இது காட்டிக்கொடுப்பவரின் காலம்



இது காட்டிக்கொடுப்பவரின் காலம் 
எலும்புத்துண்டுகளுக்காய் 
தாய்மாரை கொலை செய்யும் காலம் 
இது போராளிகளற்ற காலம் 

வியாழன், 10 மே, 2012

சிங்க கொடிக்கு கும்பிடுபோடுற தாடி நரி கூசாமல்சொல்லுது



சம்பந்தர் ஐயா பயந்து 
இந்தியாவில ஒளிச்சிருந்தவராம் 
தாடி நரி சொல்லுது 
யாருக்கு பயந்து?
அரச பயங்கரவாதிகளுக்கும் 
அதில  ஒட்டியிருக்கிற 
தாடி அடியாக்களுக்கும் பயந்துதான் 
அதை அவர் சொல்லயில்லை
தாடி என்றால் துணிஞ்சவரே
அவர் வன்னிக்கு போனவரே 
அவரும் இந்தியாவில ஒளிச்சிருப்பார் 
அவர் இந்தியாவிலயும்கொலையல்லோ
செய்து போட்டார்  
  
சிங்கக்கொடி சம்பந்தன் என்று 
வேற யாருமல்ல 
சிங்க கொடிக்கு கும்பிடுபோடுற 
தாடி நரி கூசாமல்சொல்லுது 
என்ன அபத்தமப்பா


அறளை பெயர்ந்த சம்பந்தர் ஐயா 
காட்டிய கொடி பச்சைக்கொடி 
அரச பயங்கரவாதம் 
காட்டிய கொடி பிச்சைக்கொடி   







அரசு புலிக்கொடி காட்டுது



சம்பந்தர் ஐயா 
சிங்ககொடி காட்ட 
அரசு புலிக்கொடி காட்டுது 
கொடிகளை 
அவையாள மறக்கமுடியவில்லையோ?

புதன், 9 மே, 2012

பதவியும்,பணமும் சொந்த இன அழிப்பிற்கு துணை போக வைத்தது



சகோதரி தமரா 
உங்களை 
ஐ நா நிரந்தர பிரதிநிதியாய் 
நியமிக்கையிலேயே 
தமிழ் பாமரனுக்கே தெரியும் 
ஊறுகாயாய் உன்னை பாவித்து 
தமிழனுக்கு 
இங்கு பிரச்சனை இல்லை என்று 
சிங்களம் உலகை ஏமாற்றி 
தன அலுவல் முடிய 
நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள் என்று 
பதவியும்,பணமும் 
சொந்த இன அழிப்பிற்கு துணை போக வைத்தது 
இப்பொழுதும் 
தமிழன் மட்டும் தான் 
உங்களுக்காய் அனுதாபப் படுகிறான் 
இப்படி இருந்தென்ன 
நாளையும் 
தமரா போல் தமிழன் வருவான் 
பதவிக்காகவும் பணத்திற்காகவும்