வியாழன், 28 ஜூலை, 2011

எனக்கும் பங்கிருக்குதல்லோ

  கூட்டை மறக்காத ஆசாமி 
கொள்ளை அடிச்சதில 
வழமைபோல 
எனக்கும் பங்கிருக்குதல்லோ 
இல்லாட்டி உள்ளுக்கு தள்ளி விடுவன் 

திங்கள், 25 ஜூலை, 2011

அடிவருடிகளின் கூட்டுஇன அழிப்பின் சூத்திரதாரியும் 
சொந்த இனத்தை 
எலும்புத்துண்டுக்காய் 
காட்டிக்குடுக்கும் 
அடிவருடிகளின் கூட்டு 

ஞாயிறு, 24 ஜூலை, 2011

மரத்தால் வீழ்ந்த மக்களை மாடாய் ஏறி மிதித்த எருமைகள்

தேர்தல் சட்டங்களை மீறி 
அனைத்து 
அட்டூழியங்கள் செய்த 
அரசும் அடிவருடிகளும் 
மக்களின் தீர்ப்பில் 
மண் கவ்வினர் 
மரத்தால் வீழ்ந்த மக்களை
மாடாய் ஏறி மிதித்த எருமைகள்       

வெள்ளி, 22 ஜூலை, 2011

உன் பாவம் பத்து பிறப்பிலும் போகாது


மகனே 
உன்னைவிட பிச்சைகாரர்கள்
எத்தனை மடங்கு பெரியவர் -இதை 
என்றாவது நினைத்திருப்பாயா?
கசபோக்கிரியாய் 
சொந்த இனம் அழிக்கிறாயே!
உன் பாவம் 
பத்து பிறப்பிலும் போகாது 

வியாழன், 21 ஜூலை, 2011

டக்லஸ் நீ மாறுவேசம் போட்டுவாக்கு சீட்டு எல்லாம் கொள்ளை அடிச்சாச்சு 
இனி பயப்படத்தேவை இல்லை 
டக்லஸ் நீ மாறுவேசம் போட்டு 
உனது வழமையான விளையாட்டைக் காட்டு 

தேர்தல் காலங்கள்

தேர்தல் காலங்கள் 
என்றால் எங்களுக்கு 
கொண்டாட்டம் தான் 
ஏமாற கூட்டம் இருக்க 
எங்களுக்கு ஏன் கவலை?
கள்ள வோட்டு,
பெட்டி மாற்றம் ,
சலுகைகளோட வென்றிடலாம் 
தென் பகுதியிலை 
இதைதான் செய்தோம் 

காசு,சாமான்களை 
வாங்கிகொண்டு 
சனம் மாறி வோட்டு போடுமோ ?

செவ்வாய், 19 ஜூலை, 2011

எவ்வளவு கொலைகளை செய்திருப்பேன்நான் கொலைக்குற்றத்திட்காக 
தமிழகத்தில் தேடப்படுகிறேன் 
இங்கு 
எவ்வளவு கொலைகளை செய்திருப்பேன்
ஆனால் 
என்னை அமைச்சராக வைத்திருக்கிறார்கள் 
எங்கள் நாடு சுதந்திரநாடு 
எனக்கு கொலைகளுக்கான,
காட்டிக்கொடுப்புகளுக்கான 
முடிகள் சூடப்படுவது மகிழ்வை தருகிறது 

ஏன் சேவகா நாயை கொல்கிறாய்?ஏன் சேவகா நாயை கொல்கிறாய்?

எஜமானனே நாயை நன்றியுள்ள மிருகம் 
என்கிறார்கள்.நானோ என் இனத்திற்கு 
நன்றி அற்றவனாய் இருக்கிறேன் 
அதனால்த்தான் பிரபு.

என்னைப் போல்தான் நீயும் 
நான் நினைத்தேன் நரியும் நாயும் 
ஒன்றாக இருக்க முடியாது என்று.  

சனி, 16 ஜூலை, 2011

வெறும் பேச்சில் மட்டும் ஜனநாயகம்


ஜனநாயகம் ஆட்டம் இழந்ததாய்
முறையிடும் அமைச்சர்கள்   


தேர்தல் விதிமுறைகளை 
அப்பட்டமாய் மீறி 
முழுப்பூசனிக்காயை 
சோற்றில் மறைக்கும் 
சேத்துஎருமைகள் 
உலகம் முன் தொடரும் 
பட்டப்பகல் ஜனநாயகக் கொலைகள் 
வெறும் பேச்சில் மட்டும் ஜனநாயகம் 
இடியமீன் இன்னும் சாகவில்லை 

பொய்கள் ஊறும் தேசம் எம் வரலாறை சிதைக்கப்போகிறது

ஆறறிவு மனிதன் 
உண்மையிலேயே 
வாளுடன் 
தன் இனத்திற்காய் 
போரிட்டு வாழ்ந்தவனுக்கு -அவன் 
நினைவின் பெருமதிப்புச் சிலையை 
சிதைத்தது -அவ் இனத்தின் 
ஆன்மாவை சிதைத்ததுக்கு சமன் 

வரலாற்றில் எப்போதாவது 
சிங்கம் வாளேந்தி இருக்கிறதா?
பொய்கள் ஊறும் தேசம் 
எம் வரலாறை சிதைக்கப்போகிறது   
 

வெள்ளி, 15 ஜூலை, 2011

உன் மரியாதையை காத்துக்கொள்வாயாகஉலக தமிழர்கள் நீ 
பெற்ற வெற்றியெல்லாம் 
தாம் பெற்ற வெற்றியாய் 
மகிழ்ந்தார்கள் -நீயோ 
வெறும் விசுக்கோத்துதான்  நான்
என்கிறாய் ஏன்?
சொந்த நலன்களுக்காய் 
இனத்தை பகைக்கிறாய் 
நாறாமல் 
உன் மரியாதையை 
காத்துக்கொள்வாயாக 

குற்றத்திட்குள் ஊறிய மட்டை

குற்றத்திட்குள் ஊறிய மட்டை
பெருமை 
சொந்த இன அழிப்பைப்பற்றி,
 அதிசயம் 
இன்ரபோல் பட்டியலில் இல்லாமை 
கர்வம் 
அடிவருடிக்கும் அடிவருடிகள்     

நான் வெறும் அடிவருடிவாளேந்தி நின்றதால்தான் 
சங்கிலியன் சிலை தகர்ப்பு 
நான் தட்டம் ஏந்தியதால் 
தப்பிவிடுவேன் 
தேவை எனில் 
பிச்சை தட்டமும் ஏந்துவேன் 

சங்கிலியன் சிலை தகர்ப்பை
என்னால் தடுக்க முடியவில்லை
ஏனெனில் நான் வெறும் அடிவருடி 

அடிவருடிகள் வெட்கப்படுவதில்லை சூடு சுரணை இல்லாததால்

எங்கடை கையால
எங்கடை கண்ணை குற்றிக்கொல்கிறோம்
கோடரிக்காம்புகள் 
தம் இனத்தை வெட்டிச்சாய்க்கின்றன 
அடிவருடிகள் 
வெட்கப்படுவதில்லை 
சூடு சுரணை இல்லாததால் 
 

வியாழன், 14 ஜூலை, 2011

மகிந்த யாழ் வருகைமகிந்த யாழ் வருகை 
அடிவருடிகள் ஏற்கனவே யாழில் 
படுகொலையாளன்
வாக்கு கேட்கவருகிறான் 
சாத்தான் வேதம் ஓதவருகிறது  

புதன், 13 ஜூலை, 2011

நினைவு சின்னத்தை நொறுக்கிவிட்டனர் மாதாளமுத்தாக்கள்
எத்தனை கால 
நினைவு சின்னத்தை 
நொறுக்கிவிட்டனர்
மாதாளமுத்தாக்கள்  

தாயை கூட 
மாற்றிவிடுவார்களோ 
பாவிகள்
 
மகாவம்சத்தை 
மாற்ற முனைபவர்களுக்கு
செக்கென்ன சிவலிங்கமென்ன.

மாநிலத்தில் சுயாட்சி இப்ப இந்த கோசத்தை காணோமே.மத்தியில் கூட்டாட்சி 
மாநிலத்தில் சுயாட்சி 
இப்ப இந்த கோசத்தை காணோமே.

இவ்வளவு மக்களைக் கொன்ற 
மகிந்தவிற்கு நன்றி சொல்கிறாராம்.

யார் இவர்?
எங்கட தலையை 
பந்தாக்கி விளையாட.

எஜமான் பிச்சைநாய் விசுவாசம்

எஜமான் பிச்சைநாய் விசுவாசம் 
எலும்புத்துண்டு முடியும் வரை 
மட்டுமல்ல 

நன்றியுள்ள நாய்களையும் சுட்டு
/ கழுத்தறுத்து 
அஸ்தியில்,
கிணற்றில்,
எதிர் வேட்பாளர் 
படலையில் கொளுவி 
உறவு படலம் தொடர்கிறது.

உண்மை தமிழ் வேட்பாளர்களே ! கவனம்!

தேர்தல் 
உண்மை தமிழ் வேட்பாளர்களே !
கவனம்!
இதுவரை 
பலரை கொன்றுகுவித்தவரின் 
கண்கள் உம்மீது படர்கிறது.
தமிழர்களே 
வேட்பாளர்களையும் காத்து 
பூரண வெற்றியையும் வழங்குங்கள்.

வென்றால் வேட்டைதான்.

தன் இனபடுகொலைக்கு   
நானும் கணிசமான பொறுப்பு
அரசு 
போர்குற்ற மேடையில ஏறினால் 
நானும் ஏற வேண்டிவரும் 
இவங்கள ஏமாத்தி 
வாக்கு கேட்பம் 
வென்றால் வேட்டைதான்.    

அம்மியும் ஒரு நாள் நகரும்உலகெங்கும் புலிக்கொடி பறக்கிறது 
நேற்று கிழக்கு தீமோர்
இன்று தென் சூடான் 
நாளை தமிழீழம் 
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
அடி மேல் அடி அடித்தால் 
அம்மியும் ஒரு நாள் நகரும் 
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

                                                              -செல்வி-  

செவ்வாய், 12 ஜூலை, 2011

ஐயாவின்ர ஆட்கள் கடத்திட்டாங்கள்ஏன் தம்பி 
சாமியின்ர மாலையை 
இவனுக்கு போடுகிறாய்?

இதை வைச்சு என்ன செய்ய?
சாமியையே 
ஐயாவின்ர ஆட்கள் 
கடத்திட்டாங்கள் 
இதையும் கொடுத்துவிடுவோம்.

நீங்கள் வீட்டிற்கு வாக்களியுங்கள்நான் உங்கள் வீட்டுப்பிள்ளை 
நீங்கள் வீட்டிற்கு வாக்களியுங்கள்
வெற்றிலை சாப்பிட்டால் 
கான்சர் வரும் 

அதைத்தான் ஐயா நீங்கள் உருவி போட்டிருக்கிறியள்.எங்கயடா உன் சட்டை 

அதைத்தான் ஐயா நீங்கள் உருவி 
போட்டிருக்கிறியள்.

உங்களை இந்த நிலைமைக்கு 
ஆளாக்கிட்டனா ? 

இங்க என்னை மாதிரி 
கன பேர் இருக்கினம்.

இனத்தைக் காட்டிக்கொடுப்பவனுக்கு மானமென்ன? ரோசமென்ன ?செய்த பாவங்களுக்கு 
பாவ மன்னிப்பா/
செய்யப்போகும் 
பாவங்களுக்கு 
அங்கீகாரமா?

இனத்தைக் காட்டிக்கொடுப்பவனுக்கு 
மானமென்ன? ரோசமென்ன ?

                                                     -செல்வி-
 

யாராவது இவ்வுலகிற்கு சொல்வீர்களா?


எனது மண்ணின் துயரை 
யாராவது 
இவ்வுலகிற்கு 
சொல்வீர்களா?
நான் குஞ்சாக இருக்கையில் 
என்னுடன் 
விளையாடிய 
குழந்தைகளை காணவில்லை.
சவக்காடாய் போன 
என் சொர்க்க பூமியை 
மீட்டுத் தருவீர்களா?
                        -செல்வி-

ஒரு பரம்பரையின் மூன்று தலை முறை எழுத்தாளர்கள்

ஈழத்தில் ஒரே பரம்பரையில் தோன்றிய வேறு
மூன்று தலை முறை எழுத்தாளர்கள் உளரோ வென 
என் அறிவுக்குத் தெரியவில்லை 
கச்சாயில் இரத்தினம் இலங்கையின் மூத்த 
எழுத்தாளர் .    இவரது நூற்றி ஐம்பதிற்கு மேற்பட்ட சிறு கதைகள் இலங்கை,
இந்திய பத்திரிகை,வானொலி,சஞ்சிகைகளில் பிரசுரமாகி இருக்கிறது.
இவற்றுள் தொடர் 
கதைகளும்,அடங்கும்.
இவரது நூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் இலங்கை 
வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கிறது.தொடர் நாடகங்களும் அடங்கும்.இலங்கை தமிழ் 
வானொலியின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நிறைவில் பேராசிரியர் 
சிவத்தம்பி அவர்கள் வானொலி நாடகங்களின் அதிக பங்களித்தவர்களில் 
நால்வரில் ஒருவராக இவரையும் குறிப்பிட்டுள்ளார்.   
இவர் பல மேடை நாடகங்களையும் எழுதி,இயக்கி மேடை ஏற்றியுள்ளார்.
இவர் பல பரிசில்களையும் பெற்றுள்ளார்.இலவு காத்த கிளி என்ற கதை அகில இலங்கை ரீதியில்
முதற் பரிசு பெற்றது.கவிதையிலும் முதற் பரிசு பெற்றுள்ளார்.இவர் 
ஆர்மோனியம்,புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராய்த் திகழ்ந்தார்.
திரைச் சீலையில் ஓவியம் வரைவதிலும் திறமையானவராய் இருந்தார்.
பாட்டாளி மக்கள் வாழ்க்கையிலே (சிறுகதைகள்),வன்னியின் செல்வி 
( நாவல்) நூலுருப்பெற்றுள்ளன.

இவரது மகளான மலரன்னை அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக 
பலராலும் அறியப்பட்டுள்ளார்.இவரது எழுபதிற்கும் மேற்பட்ட 
சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள் ,வானொலிகள் ,சஞ்சிகைகளில் 
உள்,வெளி நாடுகளில் பிரசுரமாகியுள்ளது.முப்பத்தைந்திட்கும் மேற்பட்ட 
வானொலி நாடகங்கள் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன.
பத்து ஆங்கிலக்கவிதைகள் ஆங்கிலப்பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. 
இவரது இருபத்தி மூன்று ஆக்கங்கள் பரிசு பெற்றிருக்கின்றன.மூன்று 
தடவைகள் சர்வதேச அளவில் நடை பெற்ற போட்டிகளில் பரிசு 
பெற்றுள்ளார்.சித்திரன்,மல்லிகை சிறுகதைப்போட்டிகளிலும்
அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். இவர் ஓவியம்,ஒளிப்படம் 
முதலிய வற்றிலும் ஈடு பாடு உடையவர்.  இவர் சில மொழி பெயர்ப்புகளையும் செய்துள்ளார். 

மலரவன் இவன் மலரன்னை அவர்களின் இளைய மகன்.இவன் 
இப்போது உயிரோடு இல்லை.இவனது நாலு நூல்கள் வெளியாகி 
பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய 
பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல்
பரிசு பெற்றது. இதுவரை மூன்று பதிப்புகளை பெற்றுள்ளது.
போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி 
ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு)
மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது 
ஹைக்கூ தொகுப்பாகும்)
புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது.