வெள்ளி, 30 டிசம்பர், 2011

பிண அரசியல்வாய்க்கரிசி போடும் அரசியல்
வாழாவெட்டியாக்கும்  அரசியல்
அடிவருடி,எலும்புத்துண்டுக்காய்
சொந்த இனத்தை
காட்டிக்கொடுக்கும் அரசியல்
நல்லவர் போல் வேசமிட்டு
நயவஞ்சகமாகும் அரசியல்
பிண அரசியல் 

வியாழன், 29 டிசம்பர், 2011

தமிழன் தரணியெங்கும் தலை நிமிர்ந்து வாழலாம்தேசம் எம் தாய்த்தேசம்
தலைவன் தேசத்தலைவன்
அர்ப்பணிப்பின் அளவில்
தேசம் முழு பூமியாகிறது
சுதந்திர வரலாறு
உலகில் மீள எழுதப்பட்டது
இனி எங்கும் எழுதப்படமுடியாதது.
தமிழன் தரணியெங்கும்
தலை நிமிர்ந்து வாழலாம்  

கை தூக்கி விடுங்கள்எங்களது வாழ்வு இப்படியாயிற்றா?
கவலைதான் - இருந்தும்
சிறுக சேமித்து , உழைத்து
உயருவோம்
முடிந்தால்
எம்மைப்போன்றவரை
கை தூக்கி விடுங்கள்
விடுதலைக்கான விலையாகவே
எம் துயர் தூவப்படுகிறது

    

நித்தமும் சாகிறோம் ஊர் நினைவில்ஊரின் ஞாபகம் பசுமையாய்
எத்தனை நாள் வாழ்வோம் ஏக்கத்துடன்
உயிர் பிரியுமோ ?
தவழ்ந்த மண்ணில் கால் பதியாமல்
நித்தமும் சாகிறோம் ஊர் நினைவில் 

செவ்வாய், 27 டிசம்பர், 2011

பாம்பு பூச்சி பயம் போக்கியிருக்கிறார்கள்

பன்மைத்துவ பயங்கரவாதம்!

எங்களின்
மாளிகை வீட்டை அழித்து
மீள் குடியேற்றி இருக்கிறார்கள்
ஓடி ஓடித்திரிய இருந்த
குழந்தைகளின் உயிர் எடுத்து
பாம்பு பூச்சி பயம்
போக்கியிருக்கிறார்கள்
எப்படியும் வாழலாம்
ஜனநாயகத்தை தந்திருக்கிறார்கள்     

மரத்தால் வீழ்ந்தவரை மாடுகள் ஏறி உழக்கும் கதையின் தொடர்ச்சிசுனாமியின் கொடூரம்
இலங்கையை பிழிந்த
ஏழாம் ஆண்டு நினைவு
மரத்தால் வீழ்ந்தவரை
மாடுகள் ஏறி உழக்கும்
கதையின் தொடர்ச்சி
இழப்புகளை
யாரால் ஈடுசெய்ய முடியும்
அஞ்சலி செய்து
காவு கொண்ட உயிர்களை
நினைந்து உருகுவோம்     

சனி, 24 டிசம்பர், 2011

இடியமீனின்ர மறுபிறப்பாம்

Posted Image

நான் ஜனநாயக வாதி
ஒரு எறும்பையும் கொல்லமாட்டன்
என்று சொல்லுறதை
உலகம் நம்புதா?நடிக்கிதா  ?
ஒண்ணுமே புரியல்ல
சிலர் கண்டுபிடிச்சு
சொல்லுறாங்கள்
இடியமீனின்ர மறுபிறப்பாம்
உலகத்திற்கு கேட்டிருக்குமோ?   

வெள்ளி, 23 டிசம்பர், 2011

டக்லஸ் ஐயாவின் வீரம்

மங்கலமற்ற நேசனுக்கு பூசை
டக்லஸ் ஐயாவின் வீரம்
யாருக்குத்தான் தெரியாது
அடிவருடியின் வீரத்தை
டக்லஸ் ஐயா
இப்படி எத்தனை அராஜகத்தை
ஜனநாயக நீரோட்டத்திக்க கலந்த
நீங்கள் செய்திருப்பியள்
அளவு கூட எண்டதால
உங்களுக்கு ஞாபகம் இருக்காது
வழமை மாதிரி வெள்ளை வேட்டியோடை
வெளிகிடுங்கோ 
இதில எந்தத் தொடர்பும் இல்லை எண்டு
அறிக்கை விடுங்கோ

செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஐயா! உது பெரிய விசயமே


கூட்டமைப்பு
உள்ளே அரசுடன் காதல்
வெளியில் எதிரி; டக்லஸ் ஐயா

ஐயா! உது பெரிய விசயமே 
நீங்கள் அரசின் வேலைக்கரனாய்
கூலிக்கு வேலை செய்யக்க 
சமமாய் காதலிச்சால் என்ன பாரும்.


அராஜகம் உலாவும் ஜனநாயகம்இலங்கை ஜனநாயக நாடு
பாராளமன்றம் தொடக்கம்
சாமி அறைவரை
அராஜகம் உலாவும் ஜனநாயகம்
ஆனால்
எங்கட பிரச்சனையை
நாங்கள் தான் பார்ப்போம்
ஏனென்றால் ஜனநாயக நாடு
கீ கீ கீ 

திங்கள், 19 டிசம்பர், 2011

நாங்க கொலை செய்த ஐயாவிற்கு சலூட் அடிப்பம்நான் சொல்லுறதைத்தான் நீங்கள் செய்யணும்
உங்களை உலக ஏமாற்றத்தான் நியமிக்கிறான்
அறிக்கையை நான் ஏற்கனவே தயாரிச்சிட்டான் கோத்தா

   

நாங்க விசுவாசமாய் இருப்பம்
எங்கட நாட்டுக்க யாரும் வந்து விசாரிக்கக் கூடாது
எங்கட படுகொலைகள் தெரிஞ்சு போகும்
நாங்க கொலை செய்த ஐயாவிற்கு சலூட் அடிப்பம்

 

வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஏமாற்று ஆணைக்குழு

யுத்தத்தின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் - அரசாங்கம்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது

உண்மையை கண்டறியாமல் நடிக்கும் குழு
ஏமாற்றுக்குழு
ஆணைக்குழு அமைக்கும் போதே
கொலைகாரர்கள்
அதன் அறிக்கையையும் தயாரித்துவிட்டனர்
தண்டனை வழங்குவார்களாம்  
யாருக்கு யார் ?
கொலைகாரர்களே தண்டனை வழங்கும்
பொறுப்பிலும்,
தண்டனை ஏற்க யாராவது
இளிச்ச வாயன் மாட்டுப்படுவான்?
ஏமாறுவோர் இருக்கும்வரை
ஏமாற்றுவோர் இருப்பர்
அதிகாரங்களுடன்     

பிடிபடாத இடிய---மீன்.

யாரடா ? இடியமீனின் மறுபிறப்பு
இதில் என்ன ஆச்சர்யம் நீர் தானே
நீ செய்யாத கொலையா?
நீர் சொல்லித்தானே
ஆம் நான் இடியமீன்தான் ஆனால்
பிடிபடாத இடிய---மீன்.

எல்லாம் ஒரு பவுசுக்குத்தான்பின் கதவால் வந்து படித்து
முன் கதவால் தொழில்
குள்ள நரிச்சிங்க பயங்கரவாதி 

எங்கள் காடைத்தனத்தை
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்
நேரடியாய் அரங்கேற்றலாம்
இங்கு எல்லாம் பணத்தாலும்
பதவியாலும்
அடிதடியாலும் நிகழ்த்தலாம்
பிறகென்ன மேன்முறையீடு?
எல்லாம் ஒரு பவுசுக்குத்தான்
எல்லாம் ஒரு நாடகம் தான் 

வியாழன், 15 டிசம்பர், 2011

ஒரு இனம் அழியப்போகிறது

sri


ஈழமெங்கும் சிங்கள குடியேற்றம்
துணை போகும் தமிழ் சேவகர்கள்
ஒரு இனம் அழியப்போகிறது
கோடரிக்காம்புகள்
எண்ணெய் ஊற்றியபடியும்
மதில் மேல் பூனையாயும்
 ஒரு இனம் அழியப்போகிறது
மதத்திற்கு யாரும் எதிர்ப்பில்லை
இன அழிப்பிற்கு அது துனைபோகிறதே
கவலை தருகிறது 

புதன், 14 டிசம்பர், 2011

கொக்குவிலில் பத்தைக்குள் இருந்த எலும்புக்கூடுகள்


கொக்குவிலில் 
பத்தைக்குள் இருந்த எலும்புக்கூடுகள் 
தாய் தன் பிள்ளைகளை தேடுகிறாள் 
பிள்ளைகளோ எலும்புக்கூடுகளாய் 
கொளைஞர்களோ ஆளுகிறார்
சமாதானம் வந்ததாயும் கூக்குரலிடுகிறார்    
யார் பெற்றபிள்ளைகளோ!
உரிய இறுதிக்கடனும் அற்று   

சனி, 10 டிசம்பர், 2011

வென்றால் மட்டும்தான் வாழ்வுபடம் எடுத்து
பாம்பு படமெடுத்து கொத்தும்
எல்லாம் எங்களுக்கு தெரியும்
ஒழித்தாலும் சாவு
எதிர்த்தாலும் சாவு
மதில் மேல் பூனையாய் இருந்தது போதும்
ஒன்றாய் எழுவோம்
இனியும் தோல் கொடுக்க பின் நிற்கோம்  
சாண் என்ன முழம் என்ன
நீருக்குள் தத்தளிக்குறோம்
வென்றால் மட்டும்தான் வாழ்வு
நடுநிலையாய் இருப்பதாய்
சுயநலம் காத்தது போதும்.     

அரசுடனும்,அதன் அடிவருடிகளுடன் கூட்டுச்சேர்ந்தவர்எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே?
உண்டா?இல்லையா?
ஒருபதில் தாருங்கள் 
கூட இருந்து காட்டிக்கொடுத்தவர் 
தம் வாழ்விற்காய்   
அரசுடனும்,அதன் அடிவருடிகளுடன் 
கூட்டுச்சேர்ந்தவர்
பிணம் திண்பவர்

தர்மம் தோற்பதுபோல்  வெல்லும்  
  

வெள்ளி, 2 டிசம்பர், 2011

போர்க்கால மருத்துவ இதழ்வன்னியில் தொடர்ச்சியாக வெளிவந்த இதழ்கள் பல.
இவற்றுள் கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி 
பணிமனையால் மாதாந்தம் வெளியிடப்பட்ட "விழி "
மருத்துவ இதழ் குறிப்பிடத்தக்கது .  தொண்ணூற்றி 
ஐந்து இதழ்கள்(2000-2008) தொடர்ச்சியாக வெளிவந்திருந்ததுடன் 
வெள்ளி,பவள,வைர இதழ்கள் சிறப்பிதழ்களாக  
வெளிவந்தது.விழி மருத்துவ இதழில் வெளியான 
தமது ஆக்கங்களை தொகுத்து ஐந்து புத்தகங்கள் 
நூலுருப்பெற்று பாராட்டு பெற்றன.இரு 
புத்தகங்கள் தொகுக்கப்பட இருந்தன.    

இந்த இதழின் ஆசிரியராக சுஜந்தன் அவர்களும்,
அச்சுப்பதிப்பினை அக்கராயனில் இயங்கிய 
கன்னிநிலம் பதிப்பகமும் செவ்வன செய்தர் 
மாதாந்தம் ஆயிரத்து ஐநூறு பிரதிகள் வெளிவந்து 
சுகாதாரத்தில் முன்னிலை வகித்த வன்னியின் 
முன்னேற்றத்தில் தனது பங்கை வகித்தது. 
நூறாவது இதழை காணாமல் போரால் 
அடிபட்டுப்போனது.
  

புதன், 30 நவம்பர், 2011

வன்னி விலைமதிப்பற்ற மண்


வன்னி மண்ணின் துயர்
வார்த்தைகளுள் அடங்காதது
வன்னி வரலாற்றில் வாழும்
வளமான மண்
வாய் பேச முடியா சோகத்தில் இன்று
வாசம் இழந்து கிடந்தாலும்
தமிழன் பெருமை நிறைந்த மண்
அதிக விலை கொடுத்தாலும்
விலைமதிப்பற்ற மண்     

ஒப்பற்ற வாழ்வு வாழ்ந்தவர்விதவைகளின்
அகதிகளின்
அனாதைகளின் மண்
ஒப்பற்ற வாழ்வு வாழ்ந்தவர் 
உலகமேடையில்
காட்சி பொருளானோம்   

ஞாயிறு, 27 நவம்பர், 2011

இதற்கு பதில் என்ன?சிங்கள அராஜகம் 
ஒன்று இரண்டல்ல  
தினமும் ஓராயிரம் 
புதைகுழி தொடக்கம் 
கோயில் வரை அரச வன்முறை 
இதற்கு பதில் என்ன?  

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

 

இன்று மாவீரர் நாள்

உடைக்கப்பட்ட கல்லறைகளை சூழப்படும் காலம் - செந்தோழன்

இன்று மாவீரர் நாள்
துயிலும் இல்ல சிதைவுகளில்
தமிழர் மனங்கள் உறைந்து கிடக்கிறது
சுதந்திரத்தின் தேவை
இன்று அதிகமாகிறது
என்ன ஏது செய்வது என்று
மனம் அங்கலாய்த்தாலும்
மீண்டும் பழைய காலம் வரும்
நம்பிக்கை விடிவெள்ளியாய் தெரிகிறது
கனவை மீட்டிட
இன்றும் ஒளி ஏற்றப்படும்
எதிரிக்குள்ளும் சலனமில்லாமல்       

சனி, 26 நவம்பர், 2011

மாவீரர் ஈழமெங்கும் வாழும் சாகா வரம் பெற்றவர் நீங்கள்மாவீரர்களுக்கு வீரவணக்கம்
ஒப்பற்றவர் நீங்கள்
மனிதத்தில் புனிதம் செதுக்கியவர்கள் நீங்கள்
மானிட தர்மத்திற்கு
மகுடம் சூட்டியவர் நீங்கள்
ஈழமெங்கும் வாழும்
சாகா வரம் பெற்றவர் நீங்கள்
உங்கள் கனவுகளும்
எங்கள் கனவுகளும் ஒன்றே
கனவு நனவாகும் காலம் வரும்
அதுவரை ஓயோம் 

போர் முடிவடைந்த பின்னர்


2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் - இந்த நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 882 பேர் இலங்கையில் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது