செவ்வாய், 25 டிசம்பர், 2012

இலங்கையின் ஜனநாயகம்

இன்னும்
சிங்களத்திற்கு
முண்டுகொடுக்கும்
தமிழ்க்கூலிகளும்  உண்டு - இது
தமிழரின் கறைபடிந்த வரலாறாகிறது  
யார் என்ன செய்வது?
பணம் பதினொன்றும் செய்கிறது.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

இடியமீனை வென்ற மகிந்த திமிங்கிலம்

Posted Image

இடியமீனை வென்ற மகிந்த திமிங்கிலம்
கிட்லரையே  புசித்தது
உலகம் கூர்ப்படைகிறது
சாதனைகள் புதுப்பிக்கப்படுகின்றன
தற்போதைய சாம்பியன்
மகிந்த மாத்தயாதான்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நீதி தேவதைக்கு ஆப்பு
நீதி தேவதைக்கு ஆப்பு 
மகிந்தவின் சமத்துவம் 
மக்களை மட்டுமல்ல துன்புறுத்துவது 
யாவரையும் தான் 
மகிந்த சிந்தனையின் இலக்கு 
குடும்ப கொள்ளை/ஆட்சி 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கள்ளனின் பொலிசு வேஷம் எத்தனை நாளைக்கு?"நாம் இறமையுள்ள நாடு 
எமது பிரச்னையை 
நாமே தீர்ப்போம் " மகிந்த 
உங்களாலைதானே 
காணாமல் போனார்கள் 
நீங்கள்தானே சூத்திரதாரிகள் 
பிரச்னையை தீர்க்க
உங்களாலை இயலாட்டி 
எங்கே ஐயா இறைமை?
எப்படி ஐயா கோழியும் 
மரநாயும் ஒரு கூட்டுக்குள்ள 
வாழுறது? 

கள்ளனின்   
பொலிசு வேஷம்   
எத்தனை நாளைக்கு?

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சாத்தான் ஓதும் வேதம்ஆடு நனையுது என்று 
ஓநாய் அழுகுது 
மனிதர் "சா"கையில் 
கொடியோடு ஆடிய மிருகம் 
சாத்தான் ஓதும் வேதம்   

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

சனி, 4 ஆகஸ்ட், 2012

என் புகைப்படக்கருவியின் அஞ்சலிஈழத்தில் 
விடுதலைக்காய் மடிந்த 
அனைத்து உயிர்களுக்கும் 
என் புகைப்படக்கருவியின் 
அஞ்சலி 

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பிச்சைக் கொலையாளிகள்
கொலைச்சக்கரவர்த்தி
மகிந்தவுடன் 
பிச்சைக் கொலையாளிகள்    

ஊழலில் கொடிகட்டிப்பறக்கும் 
கூட்டு 
எதிர்ப்பவருக்கு வேட்டு
பின் கதவால் சீட்டு 
போடுவது கள்ள வோட்டு 
குடிச்சால் ஒரே பாட்டு 
ஜனநாயகப்பாட்டு   
செய்யுறது எல்லாம் 
கொலைக்குளிப்பாட்டு 
ஒரு நாள் வரும் தலைக்கு மாட்டு  

செவ்வாய், 24 ஜூலை, 2012

கொழுத்துப் புழுக்கிறது சிங்களம்

Posted Image

தமிழன் என்றதால் 
ஒரு ஏழையைக் கொன்று 
சுதந்திரமாய் 
மரணச்சடங்கு கூட 
வைக்க அனுமதியற்று 
தினம் சாகிறது தமிழினம்   
கொழுத்துப் புழுக்கிறது
சிங்களம்  

கில்னஸ் சாதனை

news

இராணுவத்தில் ஒரு கேர்ணலாக
இருந்தும் 
அரசியல் செல்வாக்கால் 
ஜெனரலுக்கு 
மேல் அமர்த்தப்பட்டவன் 
விலங்கு கொல்பவனை
தண்டிக்கும் சட்டம் 
கில்னஸ் சாதனை பெறும் 
அளவுக்கு மனிதகொலை 
செய்த இவனை பாதுகாக்கிறது 
இவனது பரம்பரையும் 
இம்மண்ணில் வாழுமா?
மீண்டும் 
ஜனநாயகம் சிரிக்கிறது   

ஞாயிறு, 22 ஜூலை, 2012

கிளிநொச்சி அழகிய பூமி

கிளிநொச்சி 
அழகிய பூமி 
எதிரியால் அழுகிப்போகிறது 
அடிவருடிகளால் 
புளுங்கிப்போகிறது 
வரலாற்று பூமி 
மீண்டும் எழும் 
அதுவரை---

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இலங்கையின் பூர்வீகம் கேள்விக்குறியாகிறது
கிழக்கு மாகாணசபை தேர்தல் 
துரோகிகள் கொலைகாரர்களின் கூட்டு 
தமிழர்களின் இருப்பை குறிவைத்து 
இலங்கையின் பூர்வீகம் 
கேள்விக்குறியாகிறது 
தன்னை தானே ஆண்ட இனம் 
தனித்துவத்தை காக்குமா?
  

வெள்ளி, 6 ஜூலை, 2012

மகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான்நிமலரூபன் ஒரு தமிழ் கைதி 
ஒரு ஏழை 
அரச சிறைக்கூடத்தில் 
அடித்து,அடித்து,அடித்தே 
கொலை செய்யப்பட்டான் 
சக கைதிகள் அடிகாயங்களுடன் 
இன்னும் சாகவில்லை 
கொலைகாரன் மகிந்தா 
இன்னும் கெக்கட்டம்விட்டு 
சிரிக்கிறான் 
ஜனநாயகமும் சிரிக்கிறது 
அடிவருடிகள் மூச்சுபேச்சில்லை
பௌத்தம் இன்னும் வாழ்வதாய்
பிக்குகள் சொல்கிறார்கள்   

வெள்ளி, 15 ஜூன், 2012

எங்கள் குடும்ப ஆட்சிஎங்கள் குடும்ப ஆட்சி 
அடுத்தது 
இவர்களில்த்தான் 
கைவைக்கும் 
பார்த்து மகிழுங்கள் 

புதன், 6 ஜூன், 2012

கழுத்தில சுருக்கு வீழட்டுமே
என்ன தான் நடக்குது நடக்கட்டுமே 
நடப்பது எல்லாம் 
நல்லதாய் இருக்கட்டுமே 
கழுத்தில சுருக்கு வீழட்டுமே  

அரக்கனுக்கு என்ன புரியப்போகிறது?அரக்கனுக்கு 
என்ன புரியப்போகிறது?
எத்தனை பிஞ்சுகளை 
கொண்றிருப்பான். 
அவன் பரம்பரையிலும் 
சா மணம் இருக்கும் .   

செவ்வாய், 5 ஜூன், 2012

விடாதீர்கள் கொலைகாரனை

விடாதீர்கள் கொலைகாரனை 
வெறும் எண்ணூறு பேரைக்கொண்ற  
எகிப்து அதிபருக்கு ஆயுள் தண்டனை 
இலச்சத்திட்கு மேல் கொலை செய்த 
மகிந்தவிற்கு 
எலிசபத் மகாராணியாரின் 
நிகழ்வுக்கு அழைப்பு 
விடாதீர்கள் கொலைகாரனை 
அவன் பரம்பரையும் தப்பக்கூடாது.

புதன், 30 மே, 2012

இது கோத்தாவின் போர்தமிழர் பகுதியில் 
புத்தர் சிலைகள் 
புதிது புதிதாய் முளைக்க
இந்து சிலைகள் 
காணாமல் போகின்றன 
எப்படி இது சாத்தியமாகிறது?
இது கோத்தாவின் போர்   

இது ஒரு மாயாஜாலம்
தமிழர் பூமியில் அபிவிருத்தி 
இது ஒரு மாயாஜாலம் 
உலகை ஏமாற்ற 
கையாளும் தந்திரம் 
நிஜத்தில் 
தமிழர் நிலத்தை 
சிங்கள பௌத்தமாக்கி 
பூர்வீகம் பறிப்பே திட்டம் 
இதற்கு 
தமிழ் புல்லுருவிகளும் 
உடந்தையாவது 
தமிழரின் பிரிக்கமுடியா சோகம்     

செவ்வாய், 29 மே, 2012

தேசத்திற்கு ஒளிர்தரும் மாவீரர்களுக்காய் !


தேசத்திற்காய் 
உயிர் தந்தும் 
இன்றும் 
தேசத்திற்கு ஒளிர்தரும் 
மாவீரர்களுக்காய் 
இந்த என் நாநூறாவது பதிவு 

மற்றவர் வாழ 
வாழும் வயதில் 
உயிரையே தந்தீர்   
உங்களை 
எங்கள் மனதில் விதைக்கிறோம் 
உங்கள் தாகத்தை 
எம் உயிரில் கலக்கிறோம் 

-செல்வி-

கள்ளனே பொலிசாகிட்டான்


யாழ் பல்கலைக்கழகத்திற்கு    
இராணுவம் பாதுகாப்பாம் 
இந்த பகிடிக்கு நோபல் 
பரிசு கிடைக்குமோ?
ஏனென்றால் 
பகிடிக்கு நோபல்பரிசு இல்லை 
நல்ல காலம் 

வேலிக்கு ஓணான் சாட்சி 
பல்கலை கலக்கத்திட்கு/கலகத்திற்கு 
காரணமே இராணுவம்தான் 
கள்ளனே பொலிசாகிட்டான்    

திங்கள், 28 மே, 2012

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததுதான் உண்மைஎன்னடா நடக்குது நாட்டில?
காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததுதான் உண்மை 
அப்படி இருக்க இவங்கள் சண்டை பிடிக்கிறாங்கள் 
யார் போரை வென்றது என்று 
வல்லரசு கடலில புலிக்கப்பல்களை
அடிக்காட்டி,காட்டிக்கொடுக்காட்டி 
இப்ப 
மற்றவலமாய் சண்டை பிடிச்சிருப்பாங்கள்      

ஞாயிறு, 27 மே, 2012

சிங்களமும் கோடரிகளும் காரியாலயங்களை எரித்தனசிங்களமும் 
மடிப்பிச்சை வாங்கும் 
கோடரிகளும் 
தமிழரசுக்கட்சியினதும் ,
முஸ்லீம் காங்கிரசினதும் 
காரியாலயங்களை எரித்தன 
வழமைபோல 
ஜனநாயகமும் பேசி     

சனி, 26 மே, 2012

முஸ்லீம்களின் அமைதிவாழ்வில் அரசியல் கலக்காதீர்

முஸ்லீம்களின் அமைதிவாழ்வில்
அரசியல் கலக்காதீர் 
முஸ்லீம்களும் தமிழர்கள் 
என்பதை மறக்காதீர் 
ஒட்டிஅரசியல் செய்வோர் 
தம்வாழ்விற்காய்   
காட்டிக்குடுக்கிறார் - அது 
தமிழர்களிலும் உள்ளதுதான் 

வியாழன், 24 மே, 2012

முஸ்லீம் ,தமிழ் மக்களே !முஸ்லீம் ,தமிழ் மக்களே !
கவனம் 
சிங்களம் 
எம் உறவை கலைக்க 
மீண்டும் முஸ்தீபு 
காரை நகரில் பலாத்காரம் 
மட்டக்களப்பில் 
தமிழ் சிறுவன் 
முஸ்லீமாய்க் கண்டுபிடிப்பு 
மன்னாரில் குடியேற்றம் 
பின்னணியில் சிங்களம் தான் 
கவனம் !
முன்பு 
யாழிலிருந்து 
முஸ்லீம் மக்கள் 
வெளியேற்றப்பட்டமைக்கும் 
சிங்கள புலனாய்வே காரணம் 
நாம் மதத்தால் மட்டும் 
பிரிக்கப்பட்ட சகோதர மக்கள் 
வேறு எதுவும் எமை பிரிக்கக்கூடாது.


புதன், 23 மே, 2012

இந்த நச்சுப்பாம்பு வாழட்டும்

sarath-fonseka release-1

படுகொலைகளின் பங்காளி 
இறைவனின் தண்டனை பெற்றவன் 
இவனால் 
மிகுதி பங்காளிகள் 
தண்டனை பெறுவர்
அதற்காய் 
இந்த நச்சுப்பாம்பு வாழட்டும்  

செவ்வாய், 22 மே, 2012

காட்டிக்கொடுப்பவர் எங்கே?வட்டுவாகலிலும் புத்தகோவில்
இன்னும் 
சில வருடங்களில் 
புனிதபிரதேசமாய் பிரகடனப்படுத்தப்படும் 
அபிவிருத்தி பூச்சாண்டி காட்டி 
சிங்களரை கூட்டிவரும் 
காட்டிக்கொடுப்பவர் எங்கே?
இதுவும் அபிவிருத்தியா?
 

நச்சுப்பாம்பு கேட்டதுமகிந்தாவின் கழுத்திலிருந்து 
நச்சுப்பாம்பு கேட்டது 
தமிழா சௌக்கியமா?
பார்ப்பவர்கள் பார்க்கட்டுமே 
இது ஆனந்தக்கொழுப்பு
சோதனை மேல் சோதனை 
இது போதுமடா ஆமி  
உன் கொலையை 
இனியும் தாங்காது பூமி 

ஞாயிறு, 20 மே, 2012

இது அபிவிருத்தியாய் இருக்குமோ?என்ன நடக்கிறது?
புதிய மொழி 
மஞ்சள் காவியில் மதம் 
புதிய மக்கள் மீன் பிடிக்கிறார் 
கொலைத்தாடிக்கூட்டமும் இராணுவமும் 
இது மீள்குடிஏற்றமோ ?அபிவிருத்தியோ?
கள்ளனை பிடிச்சுக்குடுத்தாலும் 
ஆமி 
பிடிச்சுக் குடுக்கிறவனுக்குத்தானே 
அடி அடியெண்டு அடிக்குது 
இது அபிவிருத்தியாய் இருக்குமோ?     

சனி, 19 மே, 2012

உயிர்களின் சுவாலைஅற்ப சலுகைகளால் 
அடங்கிப்போக 
தன் மானம் ஒன்றும் 
செல்லாக்காசல்ல 
வாழ்வின் அடிநாதம் 
எம் உயிர்களின் பெறுமதி 
எம் சுதந்திரத்திட்கானது 
இங்கு எரிவது
வெறும் சுடரல்ல
உயிர்களின் சுவாலை   

வெள்ளி, 18 மே, 2012

மூன்றாம் ஆண்டு நிறைவு வேதனை

Posted Image

முள்ளிவாய்க்காலில்   
சிங்கள பயங்கரவாதத்தால் 
உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் 
உளப்பூர்வமான அஞ்சலி 
உறவுகளைத்தொலைத்த,இழந்த 
உறவுகளுக்கும்,
அங்கம் இழந்த சகோதர்களுக்கும் 
அமைதிப்பிரார்த்தனை 


எச்சில்/பிச்சைப்பிசாசுகளை காலம் மன்னிக்காது


முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு 
மட்டுமல்ல 
அனைத்து படுகொலைகள்,கடத்தல்கள் ,
கற்பழிப்புகள்,சிங்களமயமாக்கல்அனைத்திற்கும் 
சிங்கள அரசை போன்று 
அத்தனை பொறுப்புகளும் 
ஒட்டுக்குழுக்கள்/கூலிப்படைகளுக்கும்
உள்ளது
காலம் இவர்களை மன்னிக்காது 
எச்சில்/பிச்சைப்பிசாசுகளை 
விடுதலைக்கு காவுபோன 
அத்தனை உயிர்களும் தண்டிக்கும்