வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கழுத்தில் சிவப்பு மாலை போட்டவன் பூதத்தை ஏவினான்கழுத்தில் சிவப்பு மாலை போட்டவன் 
பூதத்தை ஏவினான் 
மரத்தால் வீழ்ந்தவனை 
மாடாய் ஏறி உலக்கும் கட்டளையுடன் ,
பூர்வீக மண்ணை விட்டு கலைக்கும் 
உள் நோக்குடன் 
பூதத்திற்கு அனைத்து வசதியும் உண்டு 
சிவப்பு பட்டி யமன் 
பூதம் சித்திரகுப்டர் 

வியாழன், 29 செப்டம்பர், 2011

எத்தனை பேரின் காலில் விழுவது?


ஒய்வின்றி கணைகள் வருகிறது 
எந்தப்பக்கம் திரும்புவது ?
எத்தனை பேரின் காலில் விழுவது?
பிரபாகரன் இருந்தால் 
அவர் காலில் மாத்திரம் வீழ்ந்திருக்கலாம் .

கிணறு வெட்ட பூதம் வந்த கதை 

சனி, 17 செப்டம்பர், 2011

பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

நீர் உண்மை வீரம் காட்டுவதாயின்
அமெர்க்காவுடன் போர்
பிரகடனம் செய்யும்
அதைவிட்டு
வெட்டு வீரப்பேச்சு வேண்டாம்
சிறு புலி அணியை வெல்ல
உலகத்தை கூட்டிவந்ததும்
போதாதென்று
போர் சட்டங்களை மீறிய
கோழை நீர்.


பரம சிவன் கழுத்திலிருந்து 
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா 

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

இன்னும் எங்களை நம்புகிறார்கள்
நாங்கள் எல்லாம் ஒன்றுக்குள் ஓன்று 
பட்டப்பகல் கொலை ,
இரவு மர்மமனிதன் 
உலகத்திற்கு பச்சைப்பொய் 
இன்னும் 
எங்களை நம்புகிறார்கள்