செவ்வாய், 24 ஜூலை, 2012

கொழுத்துப் புழுக்கிறது சிங்களம்

Posted Image

தமிழன் என்றதால் 
ஒரு ஏழையைக் கொன்று 
சுதந்திரமாய் 
மரணச்சடங்கு கூட 
வைக்க அனுமதியற்று 
தினம் சாகிறது தமிழினம்   
கொழுத்துப் புழுக்கிறது
சிங்களம்  

கில்னஸ் சாதனை

news

இராணுவத்தில் ஒரு கேர்ணலாக
இருந்தும் 
அரசியல் செல்வாக்கால் 
ஜெனரலுக்கு 
மேல் அமர்த்தப்பட்டவன் 
விலங்கு கொல்பவனை
தண்டிக்கும் சட்டம் 
கில்னஸ் சாதனை பெறும் 
அளவுக்கு மனிதகொலை 
செய்த இவனை பாதுகாக்கிறது 
இவனது பரம்பரையும் 
இம்மண்ணில் வாழுமா?
மீண்டும் 
ஜனநாயகம் சிரிக்கிறது   

ஞாயிறு, 22 ஜூலை, 2012

கிளிநொச்சி அழகிய பூமி

கிளிநொச்சி 
அழகிய பூமி 
எதிரியால் அழுகிப்போகிறது 
அடிவருடிகளால் 
புளுங்கிப்போகிறது 
வரலாற்று பூமி 
மீண்டும் எழும் 
அதுவரை---

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இலங்கையின் பூர்வீகம் கேள்விக்குறியாகிறது
கிழக்கு மாகாணசபை தேர்தல் 
துரோகிகள் கொலைகாரர்களின் கூட்டு 
தமிழர்களின் இருப்பை குறிவைத்து 
இலங்கையின் பூர்வீகம் 
கேள்விக்குறியாகிறது 
தன்னை தானே ஆண்ட இனம் 
தனித்துவத்தை காக்குமா?
  

வெள்ளி, 6 ஜூலை, 2012

மகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான்நிமலரூபன் ஒரு தமிழ் கைதி 
ஒரு ஏழை 
அரச சிறைக்கூடத்தில் 
அடித்து,அடித்து,அடித்தே 
கொலை செய்யப்பட்டான் 
சக கைதிகள் அடிகாயங்களுடன் 
இன்னும் சாகவில்லை 
கொலைகாரன் மகிந்தா 
இன்னும் கெக்கட்டம்விட்டு 
சிரிக்கிறான் 
ஜனநாயகமும் சிரிக்கிறது 
அடிவருடிகள் மூச்சுபேச்சில்லை
பௌத்தம் இன்னும் வாழ்வதாய்
பிக்குகள் சொல்கிறார்கள்