சனி, 31 மார்ச், 2012

அவை தமிழரை அழிக்க உதவுவினம்





நான் உலகை ஏமாத்த
உருவாக்கின LLRC அறிக்கையை
அமுல்படுத்தட்டாம்
LLRC இல என்ன கிடக்கு அமுல்படுத்த
அது இல்லை எங்கட பிரச்சனை
தமிழனுக்கு தீர்வு எண்டு
எதையும் கொடுக்கக்கூடாது
என்னோட
தவிச்ச முயல் அடிக்கிற தமிழரும் இருக்கினம்
அவைக்கு
தமிழர் இல நான் உருஞ்சிறதில
கொஞ்சம் கொடுத்தாபோதும்
அவை தமிழரை அழிக்க உதவுவினம்  
அப்பிடியும் ஆக்கள் இருக்கினம் 
எண்டு நினைக்கிறியளோ?

புதன், 28 மார்ச், 2012

அது பிச்சையாய்,கப்பமாய் எடுத்தது


 

ஜெனிவாவிற்கு
போயிட்டு வாறன்
வழமை போல
இனத்தை காட்டிக்குடுத்திட்டு வாறன்
மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி
என்று இப்ப நான் சொல்லுறதில்லை
தாறதை தாங்கோ
என்றுதான் கேட்பன்
ஏனென்றால்
அவங்கள்
அமைச்சர் பதவியை பிடுங்கிவிடுவாங்கள்
சூடு சுரணை
மானம் மரியாதையை தவிர
எல்லாம் எங்களிற்ற இருக்கு
அது பிச்சையாய்,கப்பமாய் எடுத்தது 

சனி, 17 மார்ச், 2012

உன்னையும் இழந்தோம் பாலா.



ஒரு பாலகனின் மரணம்
ஜீரணிக்க முடியவில்லை
உன்னை நேசிக்க
உலகமெல்லாம் மக்கள் இருக்க
இறுதிக்கடன் அற்று நீ போனாய்
பலபாலகரின் இழப்புடன்
உன்னையும் இழந்தோம் பாலா.   

செவ்வாய், 13 மார்ச், 2012

வாழ்வை இரசிக்க முடியா மன அவலம்






ஊரில் வாழ்ந்தாலும்
வாழ்வை இரசிக்க முடியா மன அவலம்
தாமரை இலையில்
ஒட்டாத நீர் 

சனி, 10 மார்ச், 2012

சாண் ஏற முலம் சறுக்கும் ஈழத்தமிழன்







மழை வரும் காலமா? இல்லையே
மயிலே மயிலே இறகு போடு
சாண் ஏற முலம் சறுக்கும் ஈழத்தமிழன்
கிரீசாய் கோடரிக்காம்புகள் 

வெள்ளி, 9 மார்ச், 2012

காறித்துப்பும் வரலாற்றில் நீயும் இருப்பாய்





எத்தனை பெண்களின்
பொட்டு அழிக்கப்பட்டது
தெரிந்தும்
பொட்டு வைத்து
தமிழரை கழுத்தறுக்கிறாய்
கதிர்காமார்கள்
மட்டுமல்ல
காசுக்காய்
கதிர்காமிகளும்
தாயைக் கொல்வார்கள்
என்கிறாய்
மறவாதே !
காறித்துப்பும்
வரலாற்றில் நீயும் இருப்பாய்
   

சனி, 3 மார்ச், 2012

சிங்களத்தால் மட்டுமல்ல

Building .d

எங்கள் ஊரை சிதைத்தவர்
எங்கள் உறவுகளைக் கொன்றவர்
இன்னும் உயிருடன் வாழ
கொன்றவரை
நல்லவர் என சொல்ல நிர்ப்பந்தித்து
உயிர் கொடுத்தவர்
பதாகை ஏந்தவைக்கும் கொடுமை
சிங்களத்தால் மட்டுமல்ல
அடிவருடிகளாலும்