புதன், 30 மே, 2012

இது கோத்தாவின் போர்தமிழர் பகுதியில் 
புத்தர் சிலைகள் 
புதிது புதிதாய் முளைக்க
இந்து சிலைகள் 
காணாமல் போகின்றன 
எப்படி இது சாத்தியமாகிறது?
இது கோத்தாவின் போர்   

இது ஒரு மாயாஜாலம்
தமிழர் பூமியில் அபிவிருத்தி 
இது ஒரு மாயாஜாலம் 
உலகை ஏமாற்ற 
கையாளும் தந்திரம் 
நிஜத்தில் 
தமிழர் நிலத்தை 
சிங்கள பௌத்தமாக்கி 
பூர்வீகம் பறிப்பே திட்டம் 
இதற்கு 
தமிழ் புல்லுருவிகளும் 
உடந்தையாவது 
தமிழரின் பிரிக்கமுடியா சோகம்     

செவ்வாய், 29 மே, 2012

தேசத்திற்கு ஒளிர்தரும் மாவீரர்களுக்காய் !


தேசத்திற்காய் 
உயிர் தந்தும் 
இன்றும் 
தேசத்திற்கு ஒளிர்தரும் 
மாவீரர்களுக்காய் 
இந்த என் நாநூறாவது பதிவு 

மற்றவர் வாழ 
வாழும் வயதில் 
உயிரையே தந்தீர்   
உங்களை 
எங்கள் மனதில் விதைக்கிறோம் 
உங்கள் தாகத்தை 
எம் உயிரில் கலக்கிறோம் 

-செல்வி-

கள்ளனே பொலிசாகிட்டான்


யாழ் பல்கலைக்கழகத்திற்கு    
இராணுவம் பாதுகாப்பாம் 
இந்த பகிடிக்கு நோபல் 
பரிசு கிடைக்குமோ?
ஏனென்றால் 
பகிடிக்கு நோபல்பரிசு இல்லை 
நல்ல காலம் 

வேலிக்கு ஓணான் சாட்சி 
பல்கலை கலக்கத்திட்கு/கலகத்திற்கு 
காரணமே இராணுவம்தான் 
கள்ளனே பொலிசாகிட்டான்    

திங்கள், 28 மே, 2012

காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததுதான் உண்மைஎன்னடா நடக்குது நாட்டில?
காகம் இருக்க பனம்பழம் வீழ்ந்ததுதான் உண்மை 
அப்படி இருக்க இவங்கள் சண்டை பிடிக்கிறாங்கள் 
யார் போரை வென்றது என்று 
வல்லரசு கடலில புலிக்கப்பல்களை
அடிக்காட்டி,காட்டிக்கொடுக்காட்டி 
இப்ப 
மற்றவலமாய் சண்டை பிடிச்சிருப்பாங்கள்      

ஞாயிறு, 27 மே, 2012

சிங்களமும் கோடரிகளும் காரியாலயங்களை எரித்தனசிங்களமும் 
மடிப்பிச்சை வாங்கும் 
கோடரிகளும் 
தமிழரசுக்கட்சியினதும் ,
முஸ்லீம் காங்கிரசினதும் 
காரியாலயங்களை எரித்தன 
வழமைபோல 
ஜனநாயகமும் பேசி     

சனி, 26 மே, 2012

முஸ்லீம்களின் அமைதிவாழ்வில் அரசியல் கலக்காதீர்

முஸ்லீம்களின் அமைதிவாழ்வில்
அரசியல் கலக்காதீர் 
முஸ்லீம்களும் தமிழர்கள் 
என்பதை மறக்காதீர் 
ஒட்டிஅரசியல் செய்வோர் 
தம்வாழ்விற்காய்   
காட்டிக்குடுக்கிறார் - அது 
தமிழர்களிலும் உள்ளதுதான் 

வியாழன், 24 மே, 2012

முஸ்லீம் ,தமிழ் மக்களே !முஸ்லீம் ,தமிழ் மக்களே !
கவனம் 
சிங்களம் 
எம் உறவை கலைக்க 
மீண்டும் முஸ்தீபு 
காரை நகரில் பலாத்காரம் 
மட்டக்களப்பில் 
தமிழ் சிறுவன் 
முஸ்லீமாய்க் கண்டுபிடிப்பு 
மன்னாரில் குடியேற்றம் 
பின்னணியில் சிங்களம் தான் 
கவனம் !
முன்பு 
யாழிலிருந்து 
முஸ்லீம் மக்கள் 
வெளியேற்றப்பட்டமைக்கும் 
சிங்கள புலனாய்வே காரணம் 
நாம் மதத்தால் மட்டும் 
பிரிக்கப்பட்ட சகோதர மக்கள் 
வேறு எதுவும் எமை பிரிக்கக்கூடாது.


புதன், 23 மே, 2012

இந்த நச்சுப்பாம்பு வாழட்டும்

sarath-fonseka release-1

படுகொலைகளின் பங்காளி 
இறைவனின் தண்டனை பெற்றவன் 
இவனால் 
மிகுதி பங்காளிகள் 
தண்டனை பெறுவர்
அதற்காய் 
இந்த நச்சுப்பாம்பு வாழட்டும்  

செவ்வாய், 22 மே, 2012

காட்டிக்கொடுப்பவர் எங்கே?வட்டுவாகலிலும் புத்தகோவில்
இன்னும் 
சில வருடங்களில் 
புனிதபிரதேசமாய் பிரகடனப்படுத்தப்படும் 
அபிவிருத்தி பூச்சாண்டி காட்டி 
சிங்களரை கூட்டிவரும் 
காட்டிக்கொடுப்பவர் எங்கே?
இதுவும் அபிவிருத்தியா?
 

நச்சுப்பாம்பு கேட்டதுமகிந்தாவின் கழுத்திலிருந்து 
நச்சுப்பாம்பு கேட்டது 
தமிழா சௌக்கியமா?
பார்ப்பவர்கள் பார்க்கட்டுமே 
இது ஆனந்தக்கொழுப்பு
சோதனை மேல் சோதனை 
இது போதுமடா ஆமி  
உன் கொலையை 
இனியும் தாங்காது பூமி 

ஞாயிறு, 20 மே, 2012

இது அபிவிருத்தியாய் இருக்குமோ?என்ன நடக்கிறது?
புதிய மொழி 
மஞ்சள் காவியில் மதம் 
புதிய மக்கள் மீன் பிடிக்கிறார் 
கொலைத்தாடிக்கூட்டமும் இராணுவமும் 
இது மீள்குடிஏற்றமோ ?அபிவிருத்தியோ?
கள்ளனை பிடிச்சுக்குடுத்தாலும் 
ஆமி 
பிடிச்சுக் குடுக்கிறவனுக்குத்தானே 
அடி அடியெண்டு அடிக்குது 
இது அபிவிருத்தியாய் இருக்குமோ?     

சனி, 19 மே, 2012

உயிர்களின் சுவாலைஅற்ப சலுகைகளால் 
அடங்கிப்போக 
தன் மானம் ஒன்றும் 
செல்லாக்காசல்ல 
வாழ்வின் அடிநாதம் 
எம் உயிர்களின் பெறுமதி 
எம் சுதந்திரத்திட்கானது 
இங்கு எரிவது
வெறும் சுடரல்ல
உயிர்களின் சுவாலை   

வெள்ளி, 18 மே, 2012

மூன்றாம் ஆண்டு நிறைவு வேதனை

Posted Image

முள்ளிவாய்க்காலில்   
சிங்கள பயங்கரவாதத்தால் 
உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் 
உளப்பூர்வமான அஞ்சலி 
உறவுகளைத்தொலைத்த,இழந்த 
உறவுகளுக்கும்,
அங்கம் இழந்த சகோதர்களுக்கும் 
அமைதிப்பிரார்த்தனை 


எச்சில்/பிச்சைப்பிசாசுகளை காலம் மன்னிக்காது


முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு 
மட்டுமல்ல 
அனைத்து படுகொலைகள்,கடத்தல்கள் ,
கற்பழிப்புகள்,சிங்களமயமாக்கல்அனைத்திற்கும் 
சிங்கள அரசை போன்று 
அத்தனை பொறுப்புகளும் 
ஒட்டுக்குழுக்கள்/கூலிப்படைகளுக்கும்
உள்ளது
காலம் இவர்களை மன்னிக்காது 
எச்சில்/பிச்சைப்பிசாசுகளை 
விடுதலைக்கு காவுபோன 
அத்தனை உயிர்களும் தண்டிக்கும் வியாழன், 17 மே, 2012

முள்ளிவாய்க்கால் நினைவு நெஞ்சை குடைகிறது


முள்ளிவாய்க்கால் நினைவு 
நெஞ்சை குடைகிறது 
விடுதலை தேசம் சிறைப்பட்டது 
ஏதுமறியாமல் பிஞ்சுகள் இறந்தன
மக்களோடு,வீரர்களோடு 
பூத்துக்குலுங்கிய வாழ்வு 
மயானத்தை வென்றிற்று
அடிமையாய் வாழ்வு சபிக்கப்பட்டது    

ஞாயிறு, 13 மே, 2012

இன்று அன்னையர் தினம்இன்று அன்னையர் தினம் 
ஈழத்தில் எங்களில் பலருக்கு 
தெரிந்திருக்க நியாயமில்லைத்தான் 
அன்னை மனிதத்தின் மூலம் 
இறைவனின் அற்புதபடைப்பு 
இங்கு பல பிள்ளைகளுக்கு 
உயிரோடு அன்னையில்லை 
பல அன்னைகளுக்கு 
உயிரோடு பிள்ளைகளில்லை 
ஈழத்தில் பலருக்கு இன்று 
அன்னையர் தினம் என்று 
தெரியாமல் இருப்பது நல்லது   

சனி, 12 மே, 2012

இது சிங்கள தேசத்தின் உண்மைக்கொடியாகிறது

Posted Image

தயவுசெய்து 
ஒரு நாட்டின் கொடியை
அவமதிப்பதட்காய் 
மன்னித்து விடுக- எனினும் 
இது சிங்கள தேசத்தின் 
உண்மைக்கொடியாகிறது 
என்ன செய்வது 
சோற்றினுள் 
பூசணிக்காயை மூடமுடியவில்லை   

வெள்ளி, 11 மே, 2012

இது காட்டிக்கொடுப்பவரின் காலம்இது காட்டிக்கொடுப்பவரின் காலம் 
எலும்புத்துண்டுகளுக்காய் 
தாய்மாரை கொலை செய்யும் காலம் 
இது போராளிகளற்ற காலம் 

வியாழன், 10 மே, 2012

சிங்க கொடிக்கு கும்பிடுபோடுற தாடி நரி கூசாமல்சொல்லுதுசம்பந்தர் ஐயா பயந்து 
இந்தியாவில ஒளிச்சிருந்தவராம் 
தாடி நரி சொல்லுது 
யாருக்கு பயந்து?
அரச பயங்கரவாதிகளுக்கும் 
அதில  ஒட்டியிருக்கிற 
தாடி அடியாக்களுக்கும் பயந்துதான் 
அதை அவர் சொல்லயில்லை
தாடி என்றால் துணிஞ்சவரே
அவர் வன்னிக்கு போனவரே 
அவரும் இந்தியாவில ஒளிச்சிருப்பார் 
அவர் இந்தியாவிலயும்கொலையல்லோ
செய்து போட்டார்  
  
சிங்கக்கொடி சம்பந்தன் என்று 
வேற யாருமல்ல 
சிங்க கொடிக்கு கும்பிடுபோடுற 
தாடி நரி கூசாமல்சொல்லுது 
என்ன அபத்தமப்பா


அறளை பெயர்ந்த சம்பந்தர் ஐயா 
காட்டிய கொடி பச்சைக்கொடி 
அரச பயங்கரவாதம் 
காட்டிய கொடி பிச்சைக்கொடி   அரசு புலிக்கொடி காட்டுதுசம்பந்தர் ஐயா 
சிங்ககொடி காட்ட 
அரசு புலிக்கொடி காட்டுது 
கொடிகளை 
அவையாள மறக்கமுடியவில்லையோ?

புதன், 9 மே, 2012

பதவியும்,பணமும் சொந்த இன அழிப்பிற்கு துணை போக வைத்ததுசகோதரி தமரா 
உங்களை 
ஐ நா நிரந்தர பிரதிநிதியாய் 
நியமிக்கையிலேயே 
தமிழ் பாமரனுக்கே தெரியும் 
ஊறுகாயாய் உன்னை பாவித்து 
தமிழனுக்கு 
இங்கு பிரச்சனை இல்லை என்று 
சிங்களம் உலகை ஏமாற்றி 
தன அலுவல் முடிய 
நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள் என்று 
பதவியும்,பணமும் 
சொந்த இன அழிப்பிற்கு துணை போக வைத்தது 
இப்பொழுதும் 
தமிழன் மட்டும் தான் 
உங்களுக்காய் அனுதாபப் படுகிறான் 
இப்படி இருந்தென்ன 
நாளையும் 
தமரா போல் தமிழன் வருவான் 
பதவிக்காகவும் பணத்திற்காகவும் 

  

செவ்வாய், 8 மே, 2012

யாருக்கு நாடகமாடுறான் பேடி


தமிழக மீனவருக்கு எதிராய் 
போர்க்கொடி தூக்கும் தாடி 
எம்கடற்கரையை   
ஆக்கிரமித்திருக்கும் 
சிங்களவருக்கு,இராணுவத்திற்கு 
எதிராய் மூச்சு பேச்சில்லை.
தன் நாட்டு பிரச்னையை தீர்க்க வழியில்லை 
அடுத்த நாட்டுக்கு போறார் கொலையாளி 
யாருக்கு நாடகமாடுறான் பேடி 

வெள்ளி, 4 மே, 2012

நரிகள் போடும் சிங்கவேஷம்திட்டமிட்டு 
சம்மந்தர் கையில் 
சிங்க(ள )கொடியை
திணித்தார் ரணில் 
நரிகள் போடும் சிங்கவேஷம் 
ஒரு நாள் கலையும் 
எலும்புத்துண்டுக்காய் 
வாலாட்டும் நாய்களின் 
பரம்பரையும் வடு சுமக்கும் 

மனம்அமைதியை விரும்புகிறதுமனம்அமைதியை விரும்புகிறது 
இனத்தின் நீள் வாழ்வை நினைக்கிறது 
வெறும் வாய்வீரர்களை வெறுக்கிறது 
இனத்திற்காய் மரணித்தவர் கனவை 
சனம் மறந்திடுமா?துயர் குடைகிறது    

வியாழன், 3 மே, 2012

பட்டியல் நீள்கிறது அமோக போட்டி   பட்டிமன்றத்திட்கு 
அருமையான தலைப்பு 
சுதந்திரக் கட்சியா 
ஐக்கிய தேசிய கட்சியா 
அதிக தமிழ் இன அழிப்பை செய்தது?
யார் வெல்வார்கள் ?
பட்டியல் நீள்கிறது 
அமோக போட்டி