சனி, 28 ஏப்ரல், 2012

எங்களுக்கு மத வேறுபாடுகள் இல்லைசெல்வம் இருந்தும் அதைத் துறந்த 
புத்த பகவானை காரணம் காட்டி 
புனித பிரதேசமாய் நிலத்தை சொந்தமாக்கி 
இன்னுமொரு புனிதமதத்தை 
கொச்சைப்படுத்தும் சிங்கள கொடூரம் 

புதிது புதிதாய் 
நூற்றுக்கணக்கில் 
புத்த பகவானின் சிலைகள் 
தமிழர் பூர்வீக நிலத்தில் 
முளைக்கின்றன 
நாளை 
அதை சுற்றியும் 
புனிதபிரதேசம் வருமா?
புத்த பகவானும் 
சைவ சமயத்தில் பிறந்தவர்தான் 
எங்களுக்கு 
மத வேறுபாடுகள் இல்லை 
ஆனால் 
இங்கு அது 
இன அழிப்பிற்கு  வழிகோலுகிறதே!முஸ்லீம் மக்கள் 
வீதிக்கு வந்திருக்கிறார்கள் 
அவர்கள் பெயர்சொல்லி வாழும் 
அரசியல்வாதிகளையும்,புத்தி ஜீவிகளையும் 
எங்கும் காணோம் 

சனி, 21 ஏப்ரல், 2012

முஸ்லீம் மக்களே!எத்தனை புத்த பகவானின் கோவில்களை 
தமிழர் பகுதியில் அத்துமீறி 
அமைத்தீர்கள் - இன்று 
அறுவது வருட பள்ளிவாசலை 
அழிக்க முன்நிக்கிறீர்கள் 
உண்மையில் நீங்கள் துறவிகளா?
கடவுள் நம்பிக்கை உள்ளவரா?
முஸ்லீம் மக்களே!
தமிழர் படுகொலையை மறைக்க 
நீங்களும் ஜெனிவாவரை வந்தீர்களே!
பார்த்தீர்களா சிங்கத்திமிரை 

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பேடிப்பயல் யாருக்கு வீரம் காட்டுறார்ஐயா பிடிபட்டுடுவாரோ 
உய் !இராமேஸ்வரம்  போய் 
ஆர்ப்பாட்டம் செய்வாராம் 
அடிவருடிக்கும் சூடு சுரணை இருக்குமோ?
கொலைக்குற்றவாளியை 
அங்க தேடுறாங்கள் 
நரியாவது மூளை இல்லாமல் போய் 
அங்க அம்பிடுறது 
சும்மா கதைக்குத்தான் 
பேடிப்பயல் யாருக்கு வீரம்  காட்டுறார்  
ஐயா எத்தனை கதையை விட்டிருப்பார்?
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி 
போராடப்போனவர் அபிவிருத்தியாம் 
பை நிரப்ப நல்ல யோசனைதான் 

திங்கள், 16 ஏப்ரல், 2012

இந்திய பாராளமன்ற குழுவிற்கு பலத்த வரவேற்பு.மட்டுவில் சிலைகள் உடைப்பு
காலியில்
தமிழரின் ஏழு வீடுகள்
முற்றாக எரிப்பு
இந்திய பாராளமன்ற குழுவிற்கு
பலத்த வரவேற்பு.

வியாழன், 12 ஏப்ரல், 2012

நெஞ்சங்களை கொஞ்சும் நிலவு

Posted Image

எனது மண்ணின் வனப்பு 
நினைத்தவுடன்  மனதில் மத்தாப்பு 

கவிதைகள் தோற்கும் அழகு 
நினைவுகளிலாவது நிலைக்கும் விளக்கு 
நெஞ்சங்களை கொஞ்சும் நிலவு 
பஞ்சங்களால் படரும் பொழுது 
மிஞ்சுமா பிஞ்சுகளின் வாழ்வு ?

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

நேர்மை துளி இருந்திருந்தால் ------------

பேடன் பவுல் சிலை

மகாத்மா,விபுலாந்தரின்
சிலைகளை
"மட்டு"வில் உடைத்தார் மகிந்தர்
பேடி வேறு என்ன செய்வான்?
சிறு இனத்தின் பிரதிநிதியான
புலியோடு
தனித்தனியாய் மோதமுடியாமல்
உலகம் முழுக்க உதவி பெற்று
கீழ்த்தர யுத்தம் செய்த யுத்தகுற்றவாளி
வேறு என்ன செய்வான்?
புலியால் சாகவேண்டியவரை
உலகோடு இந்தியும் காப்பாட்ட்றிற்று
அதன் பிரதிபலனை சிலைகளில்
காட்டுகிறான் சிங்கள பயங்கரவாதி
பேடி
நேருக்கு நேர் சந்திக்கமுடியா கோழை 
நிரபராதிகளை தின்னும் 
குற்றவாளி வேறு என்ன செய்வான்?
நேர்மை துளி இருந்திருந்தால் 
இந்தியாவுடன் போர்ப்பிரகடனம் 
செய்திருக்க வேண்டும் 
முடியுமாகோழைக்கு?
வெறும்  வாய்வீரப் பேடி 
பின்னால் குத்தும் முழுக்கோழை

புதன், 4 ஏப்ரல், 2012

கொலைக்கு ஒத்துழைத்தால் நேசசக்திகள்

எம் இறைமையில்
எவரும் தலையிடக்கூடாது
எமது வேலையை
நாம் பார்ப்போம்
என்ன கொலை செய்தாலும்
யாரும் தலையிடக்கூடாது
எம்மை யாரும் குற்றம் சொன்னால்
நாம்
அவர்களை பயங்கரவாதிகள்
என்றே அழைப்போம்
இது (இறக்கும்)இறமையுள்ள நாடு


செவ்வாய், 3 ஏப்ரல், 2012

பாருங்கோ யாழ்மண்ணையாழ் மண்ணில் 
சுதந்திரமாய் மக்களாம் 
ஆயுத கலாசாரம் இல்லையாம் 
பாருங்கோ யாழ்மண்ணை