தமிழனின் வாழ்நிலம்
அழகானது,வளமானது
இன்று
சிங்கள அட்டூழியத்தால்
தமிழர் அகதியாகின்றனர்
உயிரை பணயம் வைத்து
புலம்பெயருகின்றனர்
சிங்களவர் தின்ற உயிர்களில்
கடலில் கரைந்த உயிர்களும் சேரும்
அகதிவாழ்வின் கொடுமை
அனுபவித்தாலே புரியும்
அடுத்த இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
என் இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
அயலவனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
இன்று
என் சகோதரனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
நாளை----?