வியாழன், 31 மார்ச், 2011

பாவம் நல்லூர்க்கந்தன் பாவிகளை மன்னிப்பானா?


நல்லூர்க் கந்தனிடம்
கொலையாளிகள்
கிரிக்கெட் வெற்றி தோல்வி வேறு
அதிஷ்டமும் தீர்மானிக்கும்
எத்தனை கோவிலை எரித்திரிப்பீர் ?
மக்களோடு அழித்திரிப்பீர்?-இன்று
நாடகம் ஆடுகின்றீர்
பாவம் நல்லூர்க்கந்தன்
பாவிகளை மன்னிப்பானா?

புதன், 30 மார்ச், 2011

நாட்டை உருஞ்சும் நுளம்பு குடும்பம் அது யார்?


நவீன யமன்
சிங்க வேசத்தில் குள்ள நரி
மனிதனைப் புசிக்கும் விஜயன் மகன்
ஜனநாயகம் பேசும் சர்வாதிகாரி
கழுத்தில் இரத்த வளையம்
நாட்டை உருஞ்சும் நுளம்பு குடும்பம்
அது யார்? 

செவ்வாய், 29 மார்ச், 2011

இதயமில்லா உலகில் கண்ணீரில் கடல் செய்தான்



வாழ்க்கைச் சக்கரத்தில்
கூடிவாழ்ந்த அழகு வாழ்வும்,
தனித்து வாழும் கோரவாழ்வும்
இறைவன் தந்தான்
இதயமில்லா உலகில்
கண்ணீரில் கடல் செய்தான் அவனே.
கருமுகிலில்
துயர் கரைப்பதும் அவனே.

                                                      -செல்வி-  

திங்கள், 28 மார்ச், 2011

மாண்ட வீரர் கனவை சுமந்து வாடுது


மாண்ட வீரர்
கனவை சுமந்து வாடுது மரம்
பறத்தலை மறக்குது பறவை
மீண்டும்
மரம் துளிர்க்கும்
பறவைகள் பறக்கும்
கனவும் காட்சியாகும்.

                                       -செல்வி-

சனி, 26 மார்ச், 2011

சண்டாளிகள்

காலையில்
சமாதானப் பெயர் சொல்லி
எமைப்பறக்க விடுகிறார்கள்
சண்டாளிகள்
மாலையில்
மதுவோடு புசிக்கிறார்கள் எமை
எதுவுமே தெரியாதது போல்

                                                         -செல்வி-




புதன், 23 மார்ச், 2011

சுடலை வாழ்வில் தனித்த மரம்


சுடலை வாழ்வில் தனித்த மரம்
உறவுகளை இழந்த தனித்த
திசை தெரியா பறவை
திக்கு முக்காடும் வாழ்வில்
சத்திழந்த மரமும்,
காலையில் கரைதலை துறந்த காகமும்.

                                                        -செல்வி-

செவ்வாய், 22 மார்ச், 2011

நாயின் கவலையாவது தவிர்க்கப்பட்டது


ஆசையாய் வளர்த்த நாய்கூட
ஷெல்லுக்கு மிஞ்சவில்லை
நன்றி உள்ளது நாய்
நாய்படாப் பாடு நாம் படுவதால்
நாயின் கவலையாவது தவிர்க்கப்பட்டது நன்று.

                                                                -செல்வி-  

ஞாயிறு, 20 மார்ச், 2011

மனிதம் வாழாத உலகம் அழியலாம்

மனிதம் வாழாத உலகம் அழியலாம்
புனித வீரர் புதைந்த மண் 
அகழ்ந்தபோது 
மனிதம் வாழாத உலகம் அழியலாம்
பார்த்தும் பாரா உலகம் அழியலாம் 
மனிதம் சிதைந்த உலகம்
இருந்தென்ன வாழ்ந்தென்ன.
                                                   -செல்வி-

சரித்திரத்தில் தமிழன் கரைவானா? சகாப்தமாய் நிமிர்வானா?


ஓடி ஓடி கால்கள் தேய்ந்தன
ஊர் ஊராயான இடப்பெயர்வு
சொந்த/பூர்வீகமண்ணில் ஓட்டம்
சாக்களுக்கிடையில் வாழ்வு
தப்பியவரை
தவித்த முயல் அடித்தது சிங்களம்
சரித்திரத்தில்
தமிழன் கரைவானா?
சகாப்தமாய் நிமிர்வானா?

                                            -செல்வி-

சனி, 19 மார்ச், 2011

தன்மானத்துடன் உயிர் ஈய்ந்தவரும் தன் வாழ்விற்காய் காட்டிகொடுப்பவரும் மனித வாழ்வியலில் எதிர்



தன்மானத்துடன் உயிர் ஈய்ந்தவரும்
தன் வாழ்விற்காய் காட்டிகொடுப்பவரும்
மனித வாழ்வியலில் எதிர்முனைகள்
சுமை தூக்கும் போது/ துன்பம் வரும் போது
தோள் கொடாதவன் ,தனக்காய் வாழ்ந்தவன்
நரமனிதன்
பணமும்,பலமும் உயிர் நசிக்கும் உலகில்
தர்மம் தலை காக்குமா?

                                               -செல்வி- 

நானும் என்கமராவும்-18/03/2011

பனி ஏந்தும் மரங்கள்
துளிர் இழப்பதில்லை
வெண் நிறத்தூய்மை
வேறெங்கும் இல்லை

                                    -செல்வி-



வெள்ளி, 18 மார்ச், 2011

தேசியம் சிதைக்கும் சிங்களத்திற்கு இனம் அழிக்கும் யமன்களுக்கு காந்திதேசமும் துணை அழு


ஒன்றும் செய்யமுடியாநிலை
ஈழத்தமிழனின் இன்றையநிலை 
மூக்கை பிடித்தால் 
வாயை ஆவென முடியாநிலை
கோடரியும்,கோடரிக்காம்புகளும்
எம் தேசமெங்கும் படர்ந்த நிலை
தேசியம் சிதைக்கும் சிங்களத்திற்கு
இனம் அழிக்கும் யமன்களுக்கு
காந்திதேசமும் துணை 
அழுவது நாங்கள் மட்டுமல்ல
புத்தபகவானும்,காந்தி மகானும் தான் .


                                                    -செல்வி-      

புதன், 16 மார்ச், 2011

என்னைத் தெரியுமா? நான் தான் மகிந்த ராசா சொந்த மக்களை கொல்லுதல் என்

என்னைத் தெரியுமா?
நான் தான் மகிந்த ராசா
சொந்த மக்களை கொல்லுதல்
என் வீர விளையாட்டு ஆ கா கா --
தமிழன் என்பதால்
தமிழக மீனவரைக் கொன்றேன்
இந்தி என் மந்தி
சரி நான் இனவாதி அல்ல
பல சிங்களவரைக் கொன்றிருக்கிறேன்
நான் ஜனாதிபதியாய் இருக்கிறேன்
இருபத்தியோராம் நூற்றாண்டாம் கீ கீ கீ
நான் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை
எம் பீ ,ஊடகவியலாளர்,பிச்சைக்காரன்
எவனையும் கொள்வேன்
யமன் தான் எருதில் வருவான்
நான் அப்படியல்ல
கிபீர் ,வெள்ளை வான் எதுவென்றாலும்
சர்வதேச நீதிமன்றம் கீ கீ கீ
சட்டத்தை மதிப்பவன்
சட்டத்தில் எனக்கே டாக்டர் பட்டம் சூட்டியவன்
நான் நீதிமன்றம் போகமாட்டேன்
என் ஆட்கள் யாரையும் விடவும்மாட்டேன்
என்னைக்காட்டிக் கொடுத்து விடுவார்கள்
அலிபாபாவுக்கு நாற்பதே திருடர்கள்
எனக்கு கீ கீ கீ -------------

             
  

அணு உலைகள் வெடித்துச் சிதறும் காலம்

அணு உலைகள்
வெடித்துச் சிதறும் காலம்
நல் நோக்காய் உழைப்பினும்
கெடுதல் வருகையில்
உலகையே அழிக்கும் மூளை
நிலையில்லா வாழ்வு
நிச்சயமற்ற உலகு
மனிதனே யாவற்றிட்கும் பொறுப்பு
விஞ்ஞான விபரீதம்.
                                     -செல்வி-   

செவ்வாய், 15 மார்ச், 2011

சுயநிர்ணயம் சுருக்கிடப்பட தமிழனும் காரணமாவானா?

எங்கள் மீது ஒளி விழுமா?
விடுதலைச் சூரியன் புலர்வானா?
சிறைவாழ்வு மறையாதா?
மனித காருண்யம் விருச்சமாகாதா?
சுயநிர்ணயம் சுருக்கிடப்பட 
தமிழனும் காரணமாவானா?
எழும் கேள்விகளால் 
எம்மண்ணிலும் நிலஅதிர்வு .

                                                   -செல்வி-    

ஞாயிறு, 13 மார்ச், 2011

அழகு பூமியை அழித்தது ஆழிப்பேரலை ஆழ்நிலம் பிளந்து ஆடிற்


அழகு பூமியை அழித்தது
ஆழிப்பேரலை
ஆழ்நிலம் பிளந்து
ஆடிற்று அற்புததேசம்
அழுதது எங்கள் மனம்
தொழுது வாழ்ந்த எங்களை
உழுதான் பகைவன்
உங்கள் உதவியுடன்.
உங்களுக்காய் அழ
ஐம்பதினாயிரம் உயிர்கள்
இங்கு இல்லாமல் போயிற்று.

                                           -செல்வி-  

மனிதன்-மனிதம்=மனிதன்?


எங்களுக்கு இரு சுனாமிகள்
முதலாவது
இயற்கையின் கொடுமை
பிள்ளைகளைத்தான்
அதிகம் அள்ளிப்போயிற்று -பெத்தும் 
பிள்ளையற்று பெற்றவர் உருகினர்
இரண்டாவது
செயற்கையின் கொடுமை
பெற்றோரை இழந்தனர் பிள்ளைகள்
பிள்ளைகளை இழந்தனர் பெற்றோர்
செயற்கை தடுக்கப்படக்கூடியது
தடுக்கப்படாமல் ஊக்கமளிக்கப்பட்டது
மனிதர் வாழும் உலகத்தால்.

                                                         -செல்வி-

மனிதன்-மனிதம்=மனிதன்?

அகாசி அள்ளி அள்ளி கொடுக்க நாம் உண்ண உணவற்றவரானோம். இன்று யப்பானில் பேரழிவு


யப்பான்
சிங்களத்திற்கு முண்டு கொடுத்து
எமை அகதியாய்,வீடற்றவராய்,
நாதியற்றவராய் மாற்றிற்று.
அகாசி அள்ளி அள்ளி கொடுக்க
நாம் உண்ண உணவற்றவரானோம்.
இன்று யப்பானில் பேரழிவு
நாம் வருந்துகிறோம்
அகதி வாழ்வை நாம் அறிவோம்
உதவமுடியாமல் ஏங்குகிறோம்
உங்களுக்காய் பிரார்த்திக்கிறோம்
அடிமையால் என்ன செய்யமுடியும்.

                                                     -செல்வி-  

இயற்கையை மீறிற்று செயற்கை

இயற்கையை மீறிற்று செயற்கை
எத்தனை வருட உழைப்பை
நுட்பத்தின் உச்சத்தை
ஒருநொடியில் சரித்தது
பூமி அதிர்வும் ,சுனாமியும்
கொடுமை கொடுமை
ஆயிரக்கணக்கில் உயிர்,
நாற்பது லட்ச வீடுகள் ---

                                                -செல்வி-

சனி, 12 மார்ச், 2011

இராமன் காலத்து அனுமார் போல நீங்களும் மாறுவீர்களா?

எல்லாம் பார்த்தவன் நீ
கவலை கொள்ளாதே
இராமன் காலத்து
அனுமார் போல
நீங்களும் மாறுவீர்களா?
அநியாயம் பொசுங்கும்போது
மகிழ் காலம் உமக்கும் வரும்
பொறுமை காப்பீர்.
                               செல்வி - 

வெள்ளி, 11 மார்ச், 2011

என்ன செய்வோம் ஏது செய்வோம்

என்ன செய்வோம் ஏது செய்வோம்
இருப்பதற்கு குடிசை இல்லை
ஆதரவுதர  தாயுமில்லை 
தூக்கி விட அண்ணன் இல்லை 
முகாம் வாழ்வை தாண்டிபோக 
வசதி இல்லை 
ஊர்போக துணிவுமில்லை
துளியளவும் பாதுகாப்புமில்லை.

என்ன செய்வோம் ஏது செய்வோம்
                                                      -செல்வி-

வியாழன், 10 மார்ச், 2011

இன்று எல்லாம் சுடுகாட்டுச் சாம்பலாயிற்று.

குடிலிலும் சொர்க்கம் இருந்தது
காட்டிலும் குளிரான அணைப்பு இருந்தது
குளக்கரையிலும்,வயல்வெளியிலும்
பறவைகளின் சுதந்திரம் இருந்தது
கடற்கரையில்
காவிய அழகு இருந்தது
இன்று எல்லாம்
சுடுகாட்டுச் சாம்பலாயிற்று.
                                         -செல்வி-

எந்த பாதை எங்கே பயணம் இறைவன்தான் முடிவு செய்வான் அரசன் அன்றறுப்பான்

எந்த பாதை எங்கே பயணம்
இறைவன்தான் முடிவு செய்வான்
அரசன் அன்றறுப்பான்
இறைவன் அப்படி அல்ல
தர்மம் தோட்பதுபோல் வெல்லும்.

                                  செல்வி 

புத்தபகவானே எங்களை காப்பாற்றுங்கள் ஒரு இனம் சுதந்திரமாய்

புத்தபகவானே
எங்களை காப்பாற்றுங்கள்
ஒரு இனம் சுதந்திரமாய்
வாழநினைப்பது தவறா?
யாருக்கும் சிறுதுன்பம்
செய்வதை விரும்பாதவர் நீங்கள்
உங்கள் சீடர் எனச் சொல்லி
ஒரு இனத்தையே
துவசம் செய்கிறார்கள் .
எங்களை காப்பாற்றுங்கள்.
                                             -செல்வி-  

புதன், 9 மார்ச், 2011

அமைதியில் உறைகிறது ஊர்.

அழகு கொப்பளிக்கிறது
அமைதியில்
மனம் துயில்கிறது
வெள்ளை
அமைதி,சமாதானதிட்கானது .



சமாதானம் கிடைக்க வில்லை
வெள்ளையில் விதவைகள்
அமைதியில் உறைகிறது ஊர்.

                                                     செல்வி