செவ்வாய், 8 மார்ச், 2011

எம் எதிர்காலம் கேள்விக்குறி


எம் எதிர் காலத்தை 
குறி வைக்கிறான் எதிரி.
அம்மா இல்லை
அப்பா இல்லை
வீடு இல்லை
மாமாவை விதைத்த இடமும் இல்லை.
எங்கள் கோவில் இடிந்து கிடக்க
அருகில் புதிதாய் புத்தகோவில்,பிக்கு
முன்பு
இனக்கலவரங்கள் 
சிங்கள ஊரில் நடந்ததாம்
இனி எங்கள் ஊரில் நடக்கும்
ஆமி அவனுடன்தானே
எம் எதிர்காலம் கேள்விக்குறி.
                                            -செல்வி- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக