சனி, 30 ஏப்ரல், 2011

கிணற்று நீரினுள் தன் விம்பத்தை பார்த்து குரைக்கிறது விசர் நாய்


ஐ நா விசாரணைக் குழுவையே
பயங்கரவாதப் பட்டியலில் 
இடுகிறது ஸ்ரீலங்கா 
ஐ நா விற்கான
செயலாலரைக்கூட-உனக்கு  
என்ன தகுதி உண்டு? 
கேள்வி கேட்கிறது
துட்டகைமினுவின் தேசம்
கிணற்று நீரினுள்
தன் விம்பத்தை பார்த்து
குரைக்கிறது விசர் நாய்
எப்போது கிணற்றினுள் பாயும்? 

                                                     -செல்வி-

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

மந்தையில் ஓன்று யானையில் போகிறது
மேர்வின் 
ஒருவடிகட்டிய ரவுடி 
கோமாளி 
இன்று
துட்ட கைமினு வேசத்தில் 

துட்ட கைமினு 
இனவாதி 
தவறி வீழ்ந்த எல்லாளனை 
கொன்றான்-இருந்தும் 
எல்லாளனுக்காய்
நினைவிடம் அமைத்தான் 

மேர்வின் கூட்டமோ 
நினைவுமையங்களையே
தோண்டி சிதைத்தது -இன்று
துட்டகைமினு இருந்திருந்தால் 
அதீத வீரத்தையாவது மதித்திருப்பான் 
மந்தையில் ஓன்று யானையில் போகிறது 

                                                      

உலகம் விலாங்கு மீனாய் நழுவிடுமா?


குற்றம் செய்த ஒருவன் மட்டும்
சிறைக்கூண்டில்-அடித்து
அடித்தே கொலை செய்தவருக்கு
தண்டனையை யார் தருவார்?
உலகம்
விலாங்கு மீனாய் நழுவிடுமா?
அவர் பரம்பரை வாழ்ந்திடல்
தகுமா?
நீறு பூத்த நெருப்பு
ஈழ நெஞ்சத்தில்
காத்திரு
விடியும் வரை காத்திரு 

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

21 ஆம் நூற்றாண்டு வெட்கி தலைகுனியுமா?


உலகின் பார்வை
விநோதமானது
கொலைகளை,இம்சையை
தடுக்காத உலகம்
எல்லாம் முடிந்தபின்
நீதி சொல்கிறது
சத்திரசிகிச்சை வெற்றி
உயிரை காப்பாற்ற முடியவில்லை

இயலாதவன் உயிர்கள்
ஆராச்சிக்கு பயன்படுகின்றனவா ?
இனச்சுத்திகரிப்பை பார்த்தல்
பாவமில்லையா?
21 ஆம் நூற்றாண்டு
வெட்கி தலைகுனியுமா? 
                                             -செல்வி-

திங்கள், 25 ஏப்ரல், 2011

வீரவசனத்தை நீ பேசு கூட்டாளிகள் கைவிடமாட்டாங்கள் .ஒன்றல்ல இரண்டல்ல
எத்தனை ஆயிரம் கொலை செய்தோம்
பல மறந்தே போய்விட்டது
நாய் கொல்ல சட்டமில்லா நாட்டில்
கொலை கொலையாம் பனங்காய் 
ஒன்றும் நடக்கவில்லை
ஒருதமிழனும் சாகயில்லை
சீன வெடியை கொளுத்தி முள்ளிவாய்க்கால்
பிடிச்சாச்சு
கோயபல்சும் மண்ணாங்கட்டியும்
என்னைவிடவா?
ஐ நா விற்கு தெரிஞ்சிருக்குமோ ?
யாருக்குத்தான் தெரியாது
அம்மாடி கொஞ்சமா கொலை
இப்ப என்ன செய்யிறது
உண்மையாய்
சண்டைபிடிச்சவங்களை மாட்டிவிடுவமா?
சரத்தை,இந்தியாவை,சீனாவை-----
போடா
மகாவம்சத்தையே மாத்தி எழுதப்போறம்
இதுக்குள்ள உண்மை தெரிஞ்சால்--
நல்லா இருக்காது
"காட்போட் வீரர் "உறுதியாயிடும்.
வீரவசனத்தை நீ பேசு
கூட்டாளிகள் கைவிடமாட்டாங்கள் .
    

பதிவு-150,ஒதுங்கியும்,புறம் சொல்லியும் வாழல் எதிரியுடன் இணைதலுக்கு சமன்


விடியலுக்கும் ,மறைதலுக்கும்
ஒத்த நேரம் இது
ஒற்றுமையாய்,முழுமையாய்
இணைந்தால்
இரண்டில் ஓன்று
ஒதுங்கியும்,புறம் சொல்லியும் வாழல்
எதிரியுடன் இணைதலுக்கு சமன்
முடிவு எங்கள் கைகளில்

                                            -செல்வி-

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

அடிமை வாழ்வு விடிவற்றது சுடுகாடு போல

சுதந்திர
வாழ்க்கை அழகானது
இயற்கையை போல
அடிமை வாழ்வு
விடிவற்றது
சுடுகாடு போல
                         -செல்வி- 

இது இனியும் தொடருமா?எத்தனை காலத்திற்கு
இது தொடரும்
இனியும் தொடருமா?
தமிழர்கள்
ஈழத்தில் இருந்தாலென்ன
தமிழகத்தில் இருந்தாலென்ன
மகி அண்ணன் தான் கொன்றான்
எனக்கு அதனால் அரசியல்
சிங்கிற்கு
செக்கென்ன சிவலிங்கமென்ன
ஐ நாவில் அண்ணன் பிடிபட்டுட்டான்
எங்களையும் காட்டிக்கொடுப்பானோ?
தேவை என்றால்
காலை தேநீருக்கும் ,சாப்பாட்டிற்கும்
இடையில உண்ணாவிரதம் இருக்கவேண்டிவரும்
  

சனி, 23 ஏப்ரல், 2011

உண்மை/தர்மம் இருந்தால் விசாரணையை துணிவாய் எதிர்கொள்வான்


ஐ நாவே
கொலைகாரன் என்ற பின்
காட்போட் வீரனின் கண்களில்
பயமோ பயம்
உண்மை/தர்மம் இருந்தால்
விசாரணையை துணிவாய் எதிர்கொள்வான்
சொற்ப தனித்தமிழருடன்
தனிச் சிங்களவனாய் வராமல்
உலகையும் கூட்டி சண்டை பிடித்த கோழை
மகாவம்சத்தை புழுகால்புனையப்போகிறான்
நச்சு யமன் 

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

மகிந்தரின் கனவுநான் தான் கொலைகாரன் 
இது இங்க குழந்தைக்கே தெரியும் 
இதுக்கு ஐ நா வோ சொல்லணும் 
ஆனால் 
நானும் என்ரபரிவாரங்களும் 
பிக்குகளும் 
இல்லை என்றுதான் சொல்லுவம் 
உதுவும்
இங்க விலங்குகளுக்கே தெரியும் 
என்ர கவலை எல்லாம் 
இந்தியா,சீனா,மற்றநாடுகள் 
இன்னும் ஏன் இல்லை என்று சொல்ல இல்லை 
அவங்களோட சேர்ந்துதானே எல்லாம் செய்தது 
அவங்கள் இல்லாட்டி நான் எப்பவோ அவுட் 
ஐயோ என்னை மட்டும் பிடிக்க வாறாங்கள் திங்கள், 18 ஏப்ரல், 2011

ஊருக்கு அரிசி கொடுத்தவன் வீட்டில் உலைக்கு அரிசி இல்லை    எண்ணற்ற வீடுகளில்
    புது வருடம் இல்லை
   இனி எப்போதும் இல்லை

  பல வீடுகளில்
   உலைக்கு அரிசியே இல்லை
  ஊருக்கு அரிசி
  கொடுத்தவன் வீட்டில்
  உலைக்கு அரிசி இல்லை
  வீடே கொள்ளையிடப்பட்டது
  வீதிக்கும் வளவுக்கும்
  வித்தியாசமற்ற வாழ்வில் நாம்


நாட்டிற்காக தூக்குமேடைக்கும் செல்லத் தயார்: மகிந்த
நாட்டிற்காக தூக்குமேடைக்கும் செல்லத் தயார்: மகிந்த

"சொல்லாதே செய் "
அது வீரனுக்கு அழகு
கடிக்கிற நாய் குரைக்காது


ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

வாழ்வு இனிமையானது உறவு உயிர் இழையானது இயற்கை இதமானது சுதந்திரம் வாழும்வரை.வாழ்வு இனிமையானது
உறவு உயிர் இழையானது
இயற்கை இதமானது
சுதந்திரம் வாழும்வரை.

                                         -செல்வி- 

சனி, 16 ஏப்ரல், 2011

பூர்வீக மக்களின் பிணங்கள்
எங்களோடு
எரிந்து போயின வளங்கள்
மண்ணோடு போயின
பூர்வீக மக்களின் பிணங்கள்
தரைமட்டமானது
எங்கள் வீடுகள் மட்டுமல்ல
எம் கோவில்கள் மட்டுமல்ல
எம் எதிர்காலமும் தான்.

                                         -செல்வி-

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மைகள் பூசிய வர்ணம் கண்ணீரில் கரைகிறது
பசுமை நிறை நினைவுகள்
மனதில் படர்கிறது
சுமைகள் நிறை வாழ்வில் 
பாரம் குறைக்கின்றன 
மைகள் பூசிய வர்ணம்
கண்ணீரில் கரைகிறது 

                                          -செல்வி-

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

தென் சூடான் மக்களின் இதயம் இசைக்கும் காற்று


இது
ஒரு மகிழ் மனதின் பாடல்
தென் சூடான் மக்களின்
இதயம் இசைக்கும் காற்று
எங்களது காற்றும்
சாம்பலிலிருந்து எழுமா?
தூய தியாகங்களுக்கு
விடை உண்டா?
                            -செல்வி-

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கொலைகளின் அதிபதி
கொலைகளின் அதிபதி 
வஞ்சகநீதிபதி 
நல்ல பாம்பு வேடம் போடும் 
நச்சுப்பாம்பு 
வீர வேசமிடும் படு கோழை
தனிச் சண்டைக்கு வரவில்லை
பேடி உலகை கூட்டி வந்தான் -இன்று
மரத்தால் வீழ்ந்தவனை ஏறி உலக்கும் 
எருமை மாடு (யமனின் வாகனம்) 

பிணங்கள் எங்கும் இருக்கலாம்


இது பிணம் தின்னும்
கழுகுகளின் காலம்
கொன்று தின்றது போதாதாம்
புதைகுழி தோண்டியும்---
மனிதம் நடுங்கும் பயங்கரம்
பிணங்கள் எங்கும் இருக்கலாம்
கிணற்றில்,வயல் கரையில் ,
முகாமில்,புதைகுழியில்,கடற்கரையில்,
கால் நிலம்பட கழுத்தில் சுருக்குடன்
இன்னும் பல
இதை கதைக்கவும் சுதந்திரம் இல்லை
உஷ்--
                                                  -செல்வி-

சனி, 9 ஏப்ரல், 2011

கழுத்தை சுற்றுகிறது சிவப்பு பட்டி


பூக்களில் சிவப்பு அழகு
மங்கள நிகழ்வுகளில்
மாலையாகிறது பூ

இரத்தம் புசிக்கும்
அமங்களங்களுக்காய்
கழுத்தை சுற்றுகிறது
சிவப்பு பட்டி  

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

பூக்கள் போல பூத்தவாழ்வு உதிர்ந்து போயிற்று
பூக்கள் போல பூத்தவாழ்வு
உதிர்ந்து போயிற்று
சாக்களுக்கும் 
பூவோ/பாவோ அற்று
மனிதம் சாம்பலாயிற்று 

                                        -செல்வி-

வியாழன், 7 ஏப்ரல், 2011

இவன் ஈழத்தமிழனை விட மேல்.


இவன்
கொட்டும் பனியில்
எழும் மனிதன்
இவனுக்கு கவலைகள் இல்லை
பொறாமையும் இல்லை
இவன் ஈழத்தமிழனை விட மேல்.

                                            -செல்வி- 

புதன், 6 ஏப்ரல், 2011

காணாமல் போவதும் தினம் ஒரு சடலமும்காணாமல் போவதும்
தினம் ஒரு சடலமும்
யாழின் இன்றைய நிலை
அரச தலைவரோ
தமிழருக்கு இப்ப
ஒரு பிரச்சனையும் இல்லையாம்
திருப்பதி சந்நிதியில்
பொய்யுரைக்கிறான்
அண்டப்பொய்யன்

                                           -செல்வி-   

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஐயோ!விடுதலை உதிக்குமா?உறவுகள் 
அடைசிறைக்குள்ளும்
திறந்த சிறைக்குள்ளும் 
வாடுவதை யாரறிவார்?
அரச திமிர் மிதிக்கும் வாழ்வு 
வயிற்றுக்காய் துதிக்கும் நிகழ்வு 
ஐயோ!விடுதலை உதிக்குமா?

                                                     -செல்வி-  

அழியாத கோலங்களை வரைந்தது யார்?


செழிப்பு அற்ற நிலம்
பணத்தால்
கட்டிடமாய்
எழுந்து நிற்கிறது
செழிப்பான என் நிலமோ
அந்நியரால்
அழிந்துகிடக்கிறது
அழியாத கோலங்களை
வரைந்தது யார்?

                                -செல்வி- 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

உலகக் கோப்பையை ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள் நாங்களும்


மகனே அழாதே
நாங்கள் அழுகையில்
நீங்கள் சிரித்தீர்கள்

ஒரு உலகக் கோப்பை போனால்
அடுத்தது வரும்
எங்களுக்கோ
இறந்த உறவுகள் மீள வரப்போவதில்லை
மகனே அழாதே

அழுவது முடிவல்ல
உலகக் கோப்பையை
ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்
நாங்களும்
எம் இலக்கை வெல்வோம்
அழாதே மகனே

                                              -செல்வி-

வசந்த காலத்தின் மீள் நினைவுகள் மனதில் இசைத்திடும் இராகங்கள்வசந்த காலத்தின் மீள் நினைவுகள்
மனதில் இசைத்திடும் இராகங்கள்

புகைந்தன வசந்தங்கள்
புதைந்தன சொந்தங்கள்
மீள முடியா இழப்பு
வாழ முடியா உணர்வு
வதை நிறை சோகம்

                                                -செல்வி- 

ICRC யும் உதவ இல்லை


பாதை மாறாத பயணம்
கடினங்களை
கடக்க வேண்டிய தருணம்
ICRC யும் உதவ இல்லை 
பறத்தலை மறந்தும் 
உறைந்திருந்தாலும் 
பறத்தலே விமோசனம் தரும்
வரலாறு அப்படித்தான் சொல்கிறது.

                                                       -செல்வி-

சனி, 2 ஏப்ரல், 2011

உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா


உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா
சிறைக்குள் இருந்தாலும் 
மனக்கொழுப்பு குறையவில்லை
சிங்களன் தமிழனை 
உய்ய விடப்போவதில்லை-இன்னும் 
சில தமிழ் ஏவல்ப்பேய்களுக்கு
சுய நலனே சொர்க்கம் 
சிங்களன் சிங்களன் தான் 
தமிழன் என்றால் 
சிங்களன் எல்லாம் ஒன்று
தமிழனோ 
சுயநலத்தில் நன்று?
 
உலகக்கிண்ண துடப்பாட்டுப் போட்டியின் இறுதிஆட்டத்தில் சிறிலங்கா அணி பெறும் வெற்றியானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உயிரைத் தியாகம் செய்த படையினருக்கு செலுத்தப்படும் காணிக்கையாக அமையும் என்று கூறியுள்ளார் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.