மகனே அழாதே
நாங்கள் அழுகையில்
நீங்கள் சிரித்தீர்கள்
ஒரு உலகக் கோப்பை போனால்
அடுத்தது வரும்
எங்களுக்கோ
இறந்த உறவுகள் மீள வரப்போவதில்லை
மகனே அழாதே
அழுவது முடிவல்ல
உலகக் கோப்பையை
ஒருநாள் நீங்கள் வெல்வீர்கள்
நாங்களும்
எம் இலக்கை வெல்வோம்
அழாதே மகனே
-செல்வி-
நிச்சயமாக.......
பதிலளிநீக்குhttp://faaique.blogspot.com/
பதிலளிநீக்கு