வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கள்ளனின் பொலிசு வேஷம் எத்தனை நாளைக்கு?"நாம் இறமையுள்ள நாடு 
எமது பிரச்னையை 
நாமே தீர்ப்போம் " மகிந்த 
உங்களாலைதானே 
காணாமல் போனார்கள் 
நீங்கள்தானே சூத்திரதாரிகள் 
பிரச்னையை தீர்க்க
உங்களாலை இயலாட்டி 
எங்கே ஐயா இறைமை?
எப்படி ஐயா கோழியும் 
மரநாயும் ஒரு கூட்டுக்குள்ள 
வாழுறது? 

கள்ளனின்   
பொலிசு வேஷம்   
எத்தனை நாளைக்கு?

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சாத்தான் ஓதும் வேதம்ஆடு நனையுது என்று 
ஓநாய் அழுகுது 
மனிதர் "சா"கையில் 
கொடியோடு ஆடிய மிருகம் 
சாத்தான் ஓதும் வேதம்   

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

சனி, 4 ஆகஸ்ட், 2012

என் புகைப்படக்கருவியின் அஞ்சலிஈழத்தில் 
விடுதலைக்காய் மடிந்த 
அனைத்து உயிர்களுக்கும் 
என் புகைப்படக்கருவியின் 
அஞ்சலி 

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பிச்சைக் கொலையாளிகள்
கொலைச்சக்கரவர்த்தி
மகிந்தவுடன் 
பிச்சைக் கொலையாளிகள்    

ஊழலில் கொடிகட்டிப்பறக்கும் 
கூட்டு 
எதிர்ப்பவருக்கு வேட்டு
பின் கதவால் சீட்டு 
போடுவது கள்ள வோட்டு 
குடிச்சால் ஒரே பாட்டு 
ஜனநாயகப்பாட்டு   
செய்யுறது எல்லாம் 
கொலைக்குளிப்பாட்டு 
ஒரு நாள் வரும் தலைக்கு மாட்டு