செவ்வாய், 31 மே, 2011

தமிழர் என்றால் அடி உதை




தமிழர் என்றால் அடி உதை
எந்நேரமும் எங்கும் நடக்கலாம் 
இலங்கையில் 
தமிழருக்கான அடையாளம் இது 
சில காலம் 
தமிழன் தலை நிமிர்ந்து திரிந்தது 
வரலாறு
இனி பழையபடி அடி உதை 
அநியாயம் எல்லாம் 

                                          -செல்வி-

எங்கள் ஊர்கள் எங்களுக்கு இல்லை என்று ஆகுமா?








எங்கள் ஊர்கள் 
எங்களுக்கு இல்லை 
என்று ஆகுமா?
அழகு பூமியை
சிங்களக் கறையான்
அரிக்கிறது
ஏது மிஞ்சும்? 


தமிழர்களுக்கு சுதந்திரம் பெற்று கொடுத்துவிட்டேன்


 


மகிந்த சொல்கிறார்
கருணை,ஒற்றுமையாக
நாம் சகோதரராய்
வாழ்கிறோம்
தமிழர்களுக்கு 
சுதந்திரம் பெற்று
கொடுத்துவிட்டேன்  

நூலகம் சிங்கள தலைமைகளால் நேரடியாக எரியூட்டப்பட்டது

Posted Image

30 வருடங்களுக்கு முன் 
யாழில் எம் நூலகம் 
எம் இன பொக்கிஷம் 
இதே நாளில் (31/5/81)
சிங்களத்தால் 
சுமார் ஒரு இலட்சம் 
புத்தகங்களுடன் 
எரிக்கப்பட்டது 
ஹிட்லர் கூட 
நூலகம்,மருத்துவமனைகளை
தாக்குவதை தவிர்த்திருந்தான் 
Posted Image

பல வருட ஆவணங்களுடன் 
தென்னாசியாவில் தலைசிறந்த 
நூலகம் 
சிங்கள தலைமைகளால் 
எந்தவித காரணங்களுமின்றி 
நேரடியாக எரியூட்டப்பட்டது 

                                             -செல்வி-

திங்கள், 30 மே, 2011

ஒப்பாரி இல்லா சாவுகள்



எங்கள் ஊரின் ஞாபகம் 
அடிமனதில் பசுமையாக 
எரிந்து போனதில் 
எல்லாம் அடக்கம் 
ஒப்பாரி இல்லா சாவுகள் 
அம்மா 
                                          -செல்வி-

எரிந்த தேசத்தின் மீள்நினைவுகள் 
கூடார வாழ்வில் ஒவ்வொன்றாய் 
இழந்து 
சொந்த நிலபூமி இருக்க
அகதி
உறவு இருக்குமோ ஏக்கம்   
புகையாய் உயிர் போகும் அவலம் 
                                                       -செல்வி-


எங்களைப்போல எங்கள் ஊரும் வறண்டு போயிற்று





எங்கள் ஊரின் 
இன்றைய அன்றைய காட்சிகள் 
எங்களைப்போல எங்கள் ஊரும்
வறண்டு போயிற்று
தாய்,தாய் நிலம்,கனவு 
சுதந்திரம் இழந்தோம்
மானத்தை தவிர 
யாவும் இழந்தோம்
எங்கள் ஊரைப்பார்த்தால் 
உயிரிழப்பின் அளவு தெரியவரும் 
  




கிளிநொச்சி ஒரு அழகுநகர்
வயல்களின் வனப்பும்,
தென்னைகளின் தாலாட்டும்,
கோவில்களின் புனிதமும் ,
குளம்,காடுகள் நிறை
உண்மை 
வரவேற்பும் பொங்கும்
உன்னத மண் 



Logo





















கவி வாழ்வை சாவு தின்னும் கொடுமை









கவி வாழ்வை 
சாவு தின்னும் கொடுமை
ஆவிகள் 
பெருகிய நிலம் 
கூவி கேவி அழும்
காட்சிகளின் திரட்சி
                                     -செல்வி-

ஞாயிறு, 29 மே, 2011

கனகராயன் குளத்திலும் புத்தவிகாரை






புத்தபகவானுக்கு 
நாம் விரோதி அல்ல 
புத்த பகவானை பாவித்து
நில ஆக்கிரமிப்பு செய்கிறார்
ஆக்கிரமிப்பு சிங்களர்
எம் பூர்வீக வாழ்விடங்களில் 
புத்த கோவில்களை 
எம் அனுமதி அற்று
நிறுவுகிறார்    
காவி உடைகளுக்குத்தான் 
இன்று ஆசைகள் அதிகம் 
இன்னும் 
தமிழ் புல்லுருவிகள்
ஆதிக்க வெறியரின் 
எலும்புத்துண்டுகளுடன்   
எங்கள் விரல்கள் 
எம் கண்களை குத்துகின்றன 


அடிமை வாழ்வின் நவீன அங்கீகாரமாய் நாம் - பதிவு -200







vannimakkal





முட்கள் நிறை வாழ்வு
விலங்குகளை 
கூட்டில் அடைப்பர்
எங்களையும் தான் 
எங்களுக்கு 
முழு சுதந்திரம் என்பர்
வாயிருந்தும் 
கதைக்க 
உடலிலோ/உளத்திலோ 
சத்தில்லையே 
அடிமை வாழ்வின்
நவீன அங்கீகாரமாய் நாம் 

                                    -செல்வி-

     

சோகம் கொஞ்சமா? அழுது தீர்ப்பதுக்கு




திரும்பிப் பார்த்தல் 
உளவியலுக்கு நல்லதல்ல 
அழாது விடுதலும் 
   உளவியலுக்கு நல்லதல்ல 
சோகம் கொஞ்சமா?
அழுது தீர்ப்பதுக்கு 
மறக்க முடிகிறதா
திரும்பி பார்க்காமல் இருக்க  
சித்தபிரமை பிடித்தலே
தீர்வாகும் என்கிறான் 
சக பயணி 
                                    -செல்வி-

தமிழ்ப் புல்லுருவிகளும் காயம் தந்தவனுடன் இருப்பது மகா கொடுமை




வாழ்வின் காயங்கள் 
ஈழத்தமிழனுக்கானவை 
வெளிக்காயங்கள் சிறியவை
உள்காயங்களோ மாறாதவை
என்றும் கொதி நிலையில் 
நோகின்றன 
காயங்களை தந்தவன் 
அவற்றை மறைக்கலாம்
வேதனையில் வாழ்பவன்
என் செய்வான்?
ஆற்றமுடியா காயங்களுடன் 
நாம் -எல்லாம் சரி 
தமிழ்ப் புல்லுருவிகளும் 
காயம் தந்தவனுடன் இருப்பது
மகா கொடுமை 
தமிழனின் தலை விதியை 
யார் மாற்றுவார்?

                                          -செல்வி-


சுமை தாங்கிய இனம் தமிழினம் என்பதால் எம்மீது சுமை ஏற்றி விடுவதா?


























சுமை தாங்கிய இனம்
தமிழினம் என்பதால்
எம்மீது
சுமை ஏற்றி விடுவதா?
யாரும் சவாரி செய்ய
இடம் கொடுப்போமா?
அன்றி 
பொங்கி எழுவோமா?
முடிவு எம் கையில்.
           

சனி, 28 மே, 2011

50 ஆயிரம் மக்களை கொலைசெய்தமைக்காய் வெற்றிவிழா

பிரமாண்டமான இராணுவ அணி வகுப்புடன் விமர்சையாக யுத்த வெற்றிக் கொண்டாட்டம் எதிரணி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை

50 ஆயிரம் மக்களை கொலைசெய்தமைக்காய் 
வெற்றிவிழா 
போர்க்களமே செல்லாத கோழைக்கு
மரியாதை
உலக நாடுகளிடம் 
பிச்சை எடுத்து ,உதவி பெற்று
தன் காலில் நிற்க முடியா
தலைவனுக்கு மரியாதை சீ --
பொய்யனுக்கு,கள்ளனுக்கு
பேடியிட்கு,நவீன இடியமீனுக்கு 
மரியாதை   

அக்கம் பக்கம் பார்த்து மூச்சு விடல்



எங்கள் ஊரில் 
இவை இன்று விளையாட்டுப்பொருட்கள் 
வேறு என்ன கிடக்கிறது
சித்தம் கலங்கியதால்
செக்கு,சிவன் எல்லாம் ஒன்றுதான் 
சிங்களத்திற்கு
எம் ஊர் சுற்றுலா மையம் 
திருப்பி கதைக்கக்கூட 
தைரியம் அற்ற வாழ்வு 
                                          -செல்வி-

இதில் யார் மிருகம்?


இதில் யார் மிருகம்?
அடுத்தவன் சுதந்திரத்தை
பறித்தல்
ஆக்கிரமிப்பாளனுக்கு 
விளையாட்டு -ஆனால்
ஆக்கிரமிப்பாளனுக்கு 
தெரியாது 
விளையாட்டும் ஒருநாள் 
வினையாகும் என்று.
                                        -செல்வி-


புதன், 25 மே, 2011

சாட்சிகளற்ற இனச்சுத்திகரிப்பு

25042009 Vanni avalam (45)


எம் மக்களை தனிமைப்படுத்தி,
உலகிற்கு மறைத்து
எங்களைக்கொன்றான் சிங்களன்
நவீன உலகில் மனிதப்படுகொலை
சாட்சிகளற்ற இனச்சுத்திகரிப்பு 
யாரும் கொல்லப்படவில்லையாம்
பொய்யில் ஊறிய மகிந்த -இனி
மக்களின் சத்துக்காக  
வானிலிருந்து முட்டை போட்டதாகவும்
சொல்லகூடும் நரபலிக்கூட்டம்

                                                               -செல்வி- 

எனது பூர்வீக மண்ணை உங்களுக்கு தெரியுமா?






எனது பூர்வீக மண்ணை
உங்களுக்கு தெரியுமா?
இவர்களை எங்காவது
கண்டீர்களா?
அந்நியன் அழித்ததில்
இவர்களும்,
எங்கள் மகிழ்வும்
காணாமலே போயின.

                                      -செல்வி-


எல்லாம் இழந்தோமா அன்றி விழ விழ எழுவோமா?



மக்கள் இறந்து போக
வள்ளம் மட்டும் கரை ஒதுங்கிற்று
கரை சேரா வாழ்வில்
ஆழ்கடலில் தத்தளிக்கிறது 
ஈழத்தமிழன் கனவு 
எல்லாம் இழந்தோமா
அன்றி
விழ விழ எழுவோமா?

                                    -செல்வி-


செவ்வாய், 24 மே, 2011

பணத்திற்காக தாயை கொல்கீறீர்கள்




சிங்களத்தை காப்பாற்ற 
தமிழர்களை 
உயிருடன் விழுங்குகின்றன
மானமற்ற
பச்சோந்தி தமிழ் முதலைகள்
பணத்திற்காக
தாயை கொல்கீறீர்கள் 
வரலாற்று தூரோகிகளாய்
வரிசைகொள்கிறீர்கள்
பிணத்திற்கு வியர்ப்பதாயும்
நீவீர் 
விசுக்கி விடுவதாயும் கதை வேறு
காலம் பதில் சொல்லும்
                                                 -செல்வி- 

திங்கள், 23 மே, 2011

நீதியின் காவலராய் இறுதிவரை இருப்பீரோ

























நீதியின் காவலராய்
இறுதிவரை இருப்பீரோ 
கொலையாளிகளை
தப்பவிடுவீரோ 
நீதிதேவதையை
தூக்கு மேடை ஏற்றாதீர் 

                                             -செல்வி-

ஞாயிறு, 22 மே, 2011




முல்லை மண்  
அழகில்,செழிப்பில் 
நினைவிலும் இனிக்கும் மண்-இன்று
அநாதரவாய் அழிந்து போகிறது 
நல் நிலத்தை,தொழில்களை,
செழிப்பை 
சிங்களம் காவுகொள்கிறது
எம் மக்கள் இன்னும்
மீள்குடியேற்றப்படவில்லை 
அகதியாய்,அநாதரவாய்
நிர்க்கதியில் நிலைகுலைகின்றனர் 
இன்றும் 
எம்மவர் சிலர் 
சிங்களத்திற்கு வால்பிடித்தபடி 
மனது நொறுங்கிப்போகிறது
                                            -செல்வி-

 

வரலாறு காயங்களால் நிரம்பியிருக்கிறது

யுத்த வெற்றிக் கொண்டாட்டம்

எம் பூர்வீக மண்ணில்
ஆக்கிரமிப்பு சின்னம்-அதற்கு
வெற்றிக்கொண்டாட்டம் வேறு
ஒரு மண்ணின்,இனத்தின் அழிவில்
அடுத்தவருக்கு கொண்டாட்டம்
அழிந்த இனத்தின் 
எச்சங்களுக்கு வாழ்வே திண்டாட்டம் 
வரலாறு 
காயங்களால் நிரம்பியிருக்கிறது 

                                                      -செல்வி-

சனி, 21 மே, 2011

தலை கீழ் வாழ்வு




அழகிய எங்கள் வாழ்வு
தலை கீழாய் போனது 
மங்களம் நிறை சிறப்பு
அமங்கலமாயிற்று 
பிறப்பு 
இறப்பாயிற்று 

                                           -செல்வி-


வரலாறு சொல்லி அழுகிறது




அரசு -தமிழர் கூட்டமைப்பு 
பேச்சுவார்த்தை 
உலகை ஏமாற்ற 
சிங்களத்தின் நாடகம் 
சிங்களம்
பேச்சுவார்த்தையிலோ
விசாரணை குழு அமைப்பதுலோ
பின்னிற்பதில்லை
இதுவரை 
இவற்றால் 
எந்தப்பலனும் கிடைத்ததில்லை 
வரலாறு சொல்லி அழுகிறது 
ஏமாறுவோர் இருக்கும் வரை
ஏமாற்றுவோர் உயிர் வாழ்வார்
வருமுன் காப்போம்  
                                                    -செல்வி-

ஐயோ ! இன்று நாம் அடிமைகள்






















இடர் சுமந்து இடம்பெயர்ந்த

அந்த கொடிய நாட்கள்
உயிரை கையில் பிடித்த வாழ்வு
உயிர் குடித்த பின்னும் ஓயவில்லை

சொந்த நிலத்தில்
இந்தக்கொடுமை
யாருக்கும் வரவேண்டாம்
காவிய சொத்துக்களையும்,
உயிர்களையும்
சிங்களத்திற்கு பலிகொடுத்தோம்
ஐயோ ! இன்று நாம் அடிமைகள்

                                                   -செல்வி-






வெள்ளி, 20 மே, 2011

இது ஈழ ஏழைகளின் பாட்டு



ஆந்தையும் கருப்பு பூனையும் கூட்டு
ஈழத்தில் விழப்போகுது வேட்டு
ஐ நா வே உண்மையை தோலுரிச்சு காட்டு 
இனியாவது நீதியை நிலை நாட்டு 
இது ஈழ ஏழைகளின் பாட்டு 

                                                            -செல்வி-   

பூர்வீக மண்ணை படத்தில் பார்க்கும் அவலம்




பிறந்த,வாழ்ந்த
பூர்வீக மண்ணை
படத்தில் பார்க்கும் அவலம்
சுதந்திரம் அற்ற மண்ணில்
வாழ பிடிக்கவில்லை-இருந்தும்
தாய் மண் அல்லவா 
நினைவு எல்லாம் உயிராக 
பாடாமல் பாடுகிறேன் 

                                           -செல்வி-  

வியாழன், 19 மே, 2011

போலி சிங்கங்களின் தோல் உரிக்கப்படும்




மனிதனை புசிக்கும் மிருகம் 
21ஆம் நூற்றாண்டின் அசிங்கம் 
மிருகங்கள் மனிதனாய் மாற
வேண்டிய காலத்தில்
சிறிலங்காவில் 
மனிதர்கள் 
சிங்கமாய் மாறினர்
இந்த போலி சிங்கங்கள் 
உண்மை சிங்கத்தின் 
மானத்தையும் பொசுக்கின  
ஒரு நாள் வரும் 
அன்று 
போலி சிங்கங்களின் 
தோல் உரிக்கப்படும் 
                                        -செல்வி-
 

புதன், 18 மே, 2011

எங்கள் ஊரோ சுடுகாடானது












எங்கள் ஊரோ சுடுகாடானது 
உலகின் 
அழகை பாருங்கள்
இயற்கை தாலாட்டும் 
எங்கள் ஊர் 
மனிதர்களோடு எரியூட்டப்பட்டது 
கவிதை பாடிய வாய்கள்
ஒப்பாரி ஊதின 
மழலை திரியும் மண்ணில் 
நச்சுப்பாம்புகள் ஊர்கின்றன 

                                                     -செல்வி -  

செவ்வாய், 17 மே, 2011

வினை விதைத்தவன் வினை அறுப்பான்



சிறுவர் உரிமை பேசுபவர் எங்கே?
எம் சொந்த நிலத்தில்
அந்நியர் வந்து 
சிறுவர்,பெண்கள் என 
தடுத்து வைக்க 
உரிமை வழங்கியது யார்?

பாலர்களுக்கு
பிணவாழ்வை காட்டியது யார்?
அவர் மனங்களில் படிந்த 
கொடும் துயரை யார் கழுவுவார்?
உங்கள் ஊரில் ஒரு சட்டம்
இங்கு ஒரு சட்டமா?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் 

                                                            -செல்வி- 

கொடிய நாட்களின் துயர் விடியல் வந்தாலே தீரும்




நேற்றுப்போல் இருக்கிறது
இதயம் வெடித்துவிடும் போலும் இருக்கிறது
இறுகிய இதயம்
இனி இறுக முடியா அளவில்
சிறுத்து
கல்லுப் போலும் இருக்கிறது 
நாய் இறந்தாலே 
கவலையோடு அடக்கம் செய்யும் இனம்
தாய் பிள்ளைகளை பறிகொடுத்து ,
அடக்கமும் செய்யாமல்
அந்தரித்து நிற்கிறது 
கொடிய நாட்களின் துயர்
விடியல் வந்தாலே தீரும்

                                                -செல்வி- 

திங்கள், 16 மே, 2011

நாம் சிரிக்கும் காலத்தை பாருங்கள்



எங்களில் இருந்து 
மனிதன் முன்னேறியது உண்மை
ஆனால்
சிங்களவன் 
பின்நோக்கித்தான் போனான்
அவனைப்பார்த்து 
நாம் சிரிக்கும்
காலத்தை பாருங்கள் 

                                        -செல்வி- 

ஞாயிறு, 15 மே, 2011

வளரும் போதே பொசுக்குவோம்

2


சாவில் இருந்து
மயிரிழையில் தப்பினாலும்
எம் வதையில் இருந்து
தப்ப முடியாது 
தமிழர்களை 
ஒரு கை பார்ப்போம் 
வளரும் போதே பொசுக்குவோம் 
உங்களை வாரி அணைப்பதுபோல் 
உலகிற்கு காட்டியே
காட்டிக்கொடுக்கும் 
தமிழனுடன் சேர்ந்து 
உங்களை உய்ய விடமாட்டோம் 
மகிந்தர் மட்டுமல்ல 
எந்த சிங்கள தலைவனும் 
உங்களில்த்தான் சவாரி செய்வான் 

                                                                    -செல்வி-