திங்கள், 2 மே, 2011

செத்தவர் பின் தூக்கில் தொங்கும் நாடு

Posted Image

காணாமல் போனவர் தேசம்
உஷ்!யாரும் காணாமல் போகலாம் 
சமத்துவ தேசம் -சமாதானத்திட்காய் 
வெள்ளைவான் உலாவும் ஜனநாயக நாடு
அநாமோதய பிணங்கள் எங்கும் கிடக்கலாம் 
செத்தவர் பின் தூக்கில் தொங்கும் நாடு 
விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படும்-ஆனால்
குற்றவாளி கண்டுபிடிக்கப்படமாட்டார்
ஊழலின் பிரதம கொரடா அமைச்சராயிருப்பார் 
இறப்புகளுக்கு யாரும் உரிமைகோரமாட்டார்
ஜனாதிபதிக்கே யாவும் வெளிச்சம் 
ஒரே நாளில் 
குடிசையில் இருந்தவன் கோடீஸ்வரனாவான்
கோடீஸ்வரனும் குடிசைக்குப் போவான்  
ஜனநாயகத்தின் உச்சம் 
மிச்ச சொச்சம் அடியாட்களுக்கு 

                                                             -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக