செவ்வாய், 17 மே, 2011

கொடிய நாட்களின் துயர் விடியல் வந்தாலே தீரும்




நேற்றுப்போல் இருக்கிறது
இதயம் வெடித்துவிடும் போலும் இருக்கிறது
இறுகிய இதயம்
இனி இறுக முடியா அளவில்
சிறுத்து
கல்லுப் போலும் இருக்கிறது 
நாய் இறந்தாலே 
கவலையோடு அடக்கம் செய்யும் இனம்
தாய் பிள்ளைகளை பறிகொடுத்து ,
அடக்கமும் செய்யாமல்
அந்தரித்து நிற்கிறது 
கொடிய நாட்களின் துயர்
விடியல் வந்தாலே தீரும்

                                                -செல்வி- 

2 கருத்துகள்:

  1. உயிர் கயிறாக திரிகின்ற காலம்
    தீ காற்றாய் வீசும் ஓலம்
    குருத்துவிட குருத்துவிட
    பயிர் அழிகின்ற கோலம்
    பார்த்திருக்க பார்த்திருக்க
    நிலம் பறிபோகும் அவலம்

    பதிலளிநீக்கு
  2. பிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று கடைசிமட்டும் இலட்சியத்துடன் இருந்தவர்களுக்கு அஞ்சலிகள்

    பதிலளிநீக்கு