அம்மாவே தெய்வம்
வேறொன்றும் ஈடில்லை
இன்று அன்னையர் தினம்
வன்னியில்
பிள்ளைகளை இழந்த அன்னைகளும்
அன்னைகள் இல்லா பிள்ளைகளுமாய்
காலம் கழிகிறது
வன்னிமண்
சிங்களத்தால்
பேரிழப்பை சந்தித்தது
அரசும்,
அரசின் தமிழ் பகடைக்காய்களும்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்கள்
உங்களது தாய்,தந்தை,பிள்ளை
இறந்தால் இப்படிச் சொல்வீர்களா?
வரலாறு அழியாது
பகடைக் காய்களே!
சொந்த இரத்தத்தில்
குளிக்கிறீர்கள்
காலம் பதில் சொல்லும் -அதுவரை
தாய்களின் கண்ணீரை
குடித்து முடியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக