பயமுறுத்தி,
பணம் கொடுத்து
ஐ நாவிற்கு எதிராய்
கை எழுத்து வேட்டை
ஆட்டோவை
வாடகைக் அமர்த்தி
படையினரின் சேட்டை
கை எழுத்தை வாங்கி
தலை எழுத்தை சிதைக்க
சிங்களத்தின்
தொடர் நச்சுவலைப்பின்னல்
சிங்கத்தின் கூத்துக்கு
சில தமிழ் நரிகளும்
ஒத்துழைப்பு
வெந்த புண்ணிலா வேல்பாய்வது
எட்டப்பனும்
காக்கை வன்னியனும் கூட
இந்த நரிகளை விட மேல்.
-செல்வி-
//எட்டப்பனும்
பதிலளிநீக்குகாக்கை வன்னியனும் கூட
இந்த நரிகளை விட மேல்.
//அருமையான நயமிக்க கவிதை வரிகள்
நிஜம்தாங்க...
பதிலளிநீக்கு