மனச்சாட்சி பேசுது
உனக்கும் இருக்கோ அது
நீங்கள் கேட்கிறது விளங்குது
என்னை போர் குற்றவாளியாம்
நான் எங்க போர் செய்தனான்
இனச் சுத்திகரிப்பல்லோ செய்யிறன்
அதை விட
எத்தனை ஊடகவியலாளரை,
எங்கடயாட்கலையே
பச்சையாய் கொன்றனான்
என் குற்றம் கொஞ்ச நஞ்சமில்லை
மரியாதையாய்
என்னை போற்குற்றவாளி எண்ணினம்
எனக்கு சரியான சந்தோசம்
எங்கட பிரச்சனையை
நாங்க பார்ப்பம்
வெளி நாடு ஏன்?
தமிழனோட சண்டை பிடிக்கைக்க
முழு உலக வழங்கலோடதான் அழித்தம்
இல்லாட்டில்
எங்கள பப்படம் ஆக்கியிருப்பாங்கள்
இப்ப மட்டும்
எங்களால எல்லாம் முடியும் ?
பொருளாதார தடை விதித்தால்
எனக்கோ/என் தம்பிக்கோ பிரச்சனை இல்லை
நாங்கள் நல்லா காசு அடிச்சிட்டம்
தமிழன்ட தான் நிறைய காசு
இது களை வெளியால சொல்லக்கூடாது
மகாவம்சத்திலேயே கைவச்சிட்டன்
அதில என்னை நல்லா எழுதுவாங்கள்
விண்ணன்கள்
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக