புதன், 11 மே, 2011

ரோமாபுரி அழகுதான்
ரோமாபுரி அழகுதான் 
வரலாறு பாடும் அழகு
அதைப்பார்க்க 
கண்கள் கோடி வேண்டும்  
அழகாய் எழுத 
கைகளும் கோடி வேண்டும்
எங்களுக்கோ 
இருக்க 
வீட்டுக்கோடி கூட இல்லை 
இயற்கைகளையே 
வீம்பாய் பொசுக்கினான் 
சிங்களன் 
சொத்துக்களை 
களவாடினான் மகிந்த
என்தேசத்தைப் பார்க்க
தயவுசெய்து 
கண்களே வேண்டாம்
துயர் போதும்  

1 கருத்து:

  1. கோடி இரண்டு விதமாக கையாண்டது இனிமை..

    உயிர் உடைப்போர் ஆயிரமுண்டு
    துயர் துடைப்பார் யாருமில்லை...

    பதிலளிநீக்கு