வன்னி மண்ணின் துயர்
வார்த்தைகளுள் அடங்காதது
வன்னி வரலாற்றில் வாழும்
வளமான மண்
வாய் பேச முடியா சோகத்தில் இன்று
வாசம் இழந்து கிடந்தாலும்
தமிழன் பெருமை நிறைந்த மண்
அதிக விலை கொடுத்தாலும்
விலைமதிப்பற்ற மண்
இன்று மாவீரர் நாள்
துயிலும் இல்ல சிதைவுகளில்
தமிழர் மனங்கள் உறைந்து கிடக்கிறது
சுதந்திரத்தின் தேவை
இன்று அதிகமாகிறது
என்ன ஏது செய்வது என்று
மனம் அங்கலாய்த்தாலும்
மீண்டும் பழைய காலம் வரும்
நம்பிக்கை விடிவெள்ளியாய் தெரிகிறது
கனவை மீட்டிட
இன்றும் ஒளி ஏற்றப்படும்
எதிரிக்குள்ளும் சலனமில்லாமல்
மாவீரர்களுக்கு வீரவணக்கம்
ஒப்பற்றவர் நீங்கள்
மனிதத்தில் புனிதம் செதுக்கியவர்கள் நீங்கள்
மானிட தர்மத்திற்கு
மகுடம் சூட்டியவர் நீங்கள்
ஈழமெங்கும் வாழும்
சாகா வரம் பெற்றவர் நீங்கள்
உங்கள் கனவுகளும்
எங்கள் கனவுகளும் ஒன்றே
கனவு நனவாகும் காலம் வரும்
அதுவரை ஓயோம்
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் - இந்த நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 882 பேர் இலங்கையில் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை பாராளமன்றத்தை பார்த்தியலே
நாட்டுக்கு முன்மாதிரியாய் நடக்கினம்
இங்கயே சண்டை பிடிச்சால்
வெளியில எப்படி இருக்கும்?
முழுக்காவாளிகள் கள்ளவோட்டு போட்டு
இதுக்குள்ள புகுந்துட்டுதுகள்
நாட்டுக்காய்
உயிர் தந்த வீரர்களின் வணக்க வாரம்
இன்று தொடங்குகிறது
எங்களின் இனத்திட்க்காய்
உயிர்க்கொடை தந்தவரின்
நினைவுகளை ஏந்தும்
புனிதவாரம்
மன அஞ்சலி செய்வோமாக
உன்னைப்போல் ஒரு வீரன்
தரணியில் தோன்றவில்லை
உன்னால் தமிழினம் தலை நிமிர்ந்தது
உன்னாலத்தான்
தமிழர் இனம் உலகிற்கு
மேலும் அறிமுகமாயிற்று
உன்னால் தமிழன்னை பெருமைப்படுகிறாள்
நீ ஓர் மாசற்ற வீரன்
திட்டமிட்ட
தமிழினப் படுகொலையின்
பங்காளிக்கு
ஆக மூன்று வருட சிறை
கொலைகாரர்கள்
கூண்டுக்குள்ளும் , வெளியிலும்
வாழ்கிறார்கள் ஆள்கிறார்கள்
அவர்களுக்கும் அவர் பரம்பரைக்கும்
ஆண்டவனின் தண்டனை எப்போது?
எனது கொலைகளுக்கு
தண்டனை போதும்
எல்லாம் கண்ணுக்கு
முன்னாலேயே நடக்குது
கொலைகள் செய்தவனுக்கு
செய்யச் சொன்னவன்
தண்டனை தருகிறான்
எனக்கே இவ்வளவு என்றால்
அவனுக்கு?