திங்கள், 24 அக்டோபர், 2011

வீடு வரை உறவு வீதி வரை மனைவி கூட வர எவரோ?வீடு வரை உறவு
வீதி வரை மனைவி 
கூட வர எவரோ?
கோடுவரை அழைப்பு 
ஓடும் வரை கலைப்பு
சூடு வருமோ? நினைப்பு.  

கொலைகளின் சாம்ராஜியத்திட்கு உனது சின்னம் சூட ஆசைப்படிகிறேன் நண்பனே!கொலைகளின் சாம்ராஜியத்திட்கு 
உனது சின்னம் சூட ஆசைப்படிகிறேன் நண்பனே!
எனது நாட்டில் நான் செய்த கொலைகளின் 
பட்டியல் என்னிடமே இல்லை  
பட்டியல் இட அது கொஞ்ச நஞ்சமல்ல 
அதை நினைத்து நேரத்தைவிட்டால் 
கொலைகள் குறைந்து விடுமல்லவா?
எனது இலச்சியம் எல்லாம் 
ஈழத்தில் தமிழரை அழிப்பதுதான்
உதிரியாய் என் இனம் சாவது தவிர்க்கமுடியாதது.
                                              - உன் உயிர் நண்பன் மஹிந்த- 

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கடாபீகளின் சாம்ராஜியம் முடியும் காலம்கடாபீகளின் சாம்ராஜியம் 
முடியும் காலம் 
கொலைகளில் தொடங்கி , பெருகி 
இன்று 
சர்வாதிகாரம் பொசுங்கும் காலம் 

செவ்வாய், 18 அக்டோபர், 2011

பள்ளியின் கனவில் அதன் மாவீர மாணாக்கர்கள் வருவர்

யுத்தம் தின்ற பள்ளிக் கூடம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்

எங்களைப்போல எங்கள் பள்ளியும் 
காயப்பட்டது , துயரப்பட்டது .
நாங்கள் இழந்த வசந்த காலங்களை
அதுவும் இழந்தது.
பள்ளியின் கனவில் 
அதன் மாவீர மாணாக்கர்கள் வருவர்
அப்போது மட்டும் 
பள்ளி உயிர் பெறும். 
"எஞ்சிய பொழுதுகளில் எங்களைப்போல."

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மீண்டும் ஒரு கொலைலசாந்தாவை கொலை செய்து 
அப்பாவி ஜேசுதாசனை 
கொலைகாரனாக்கி 
ஜேசு தாசனையும் கொலைசெய்து 
உண்மையை கொலை செய்யும் 
அதிபர்களின் அதிபர் நான் 


வியாழன், 6 அக்டோபர், 2011

உண்மைகள் ஒருநாள் பேசும்உண்மைகள் ஒருநாள் பேசும் 
முழுப்பூசணியை 
சோற்றில் மறைக்கமுடியாது 
கொலைகாரன் 
எத்தனை நாளுக்கு 
போலிஸ் வேஷம் போடுவான் 

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

எனது உண்மை உருவம் உலகிற்கு தெரிந்திடுமா?


பிடியாணை வருகிறது 
வேஷம் கலையுமா?
நீங்கள் யாராவது 
காட்டிக்கொடுப்பீர்களா?
எனது உண்மை உருவம் 
உலகிற்கு தெரிந்திடுமா?