kavithaikal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kavithaikal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜூலை, 2011

யாராவது இவ்வுலகிற்கு சொல்வீர்களா?


எனது மண்ணின் துயரை 
யாராவது 
இவ்வுலகிற்கு 
சொல்வீர்களா?
நான் குஞ்சாக இருக்கையில் 
என்னுடன் 
விளையாடிய 
குழந்தைகளை காணவில்லை.
சவக்காடாய் போன 
என் சொர்க்க பூமியை 
மீட்டுத் தருவீர்களா?
                        -செல்வி-

திங்கள், 30 மே, 2011


எரிந்த தேசத்தின் மீள்நினைவுகள் 
கூடார வாழ்வில் ஒவ்வொன்றாய் 
இழந்து 
சொந்த நிலபூமி இருக்க
அகதி
உறவு இருக்குமோ ஏக்கம்   
புகையாய் உயிர் போகும் அவலம் 
                                                       -செல்வி-


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அன்னையர்தினம்

கருவறைதன்னில்
    காவியமாக்கி
 பூமித்தாயின்மடியில்
     தவழவிட்டு
ஒளியைதந்து
      ஒளியாக்கி
எம் உயர்வில்
     இதயம் பூத்திருக்கும்
என் அருமைத்தாயே
     அன்னையர்தினம்  -இன்று
அன்னியமண்ணில்-நான்
    இருந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
                                                  -செல்வி -
              

வியாழன், 10 பிப்ரவரி, 2011

உறங்காத மனது

அடையாளமிழந்து
வீடு உறங்கிற்று
உண்ண உணவற்று
சமையல் கூடம் உறங்கிற்று
வேலியற்று
வீதி உறங்கிற்று
சோகத்தில்
ஊரே உறங்கிற்று
சோர்ந்து
கண்களும் உறங்கிற்று
மனக்கண்கள் மட்டும்
சதா திறந்திற்று
சிவனின் நெற்றிக்கண்ணாக மாற
துடித்திற்று.
                -செல்வி-                                                 

புதன், 9 பிப்ரவரி, 2011

வானத்தைப்போல
ஈழத்தமிழனுக்கும்
ஒளிர்வு,பேர்காரிருள்,
இடி மின்னல் வாழ்வில்.

பிரசவத்தின் போது
தாய் மரணம் நிகழ்ந்ததா?
கிழிந்து கிடக்கிறது
தமிழர் இதயம்.

ஒரு நாணயத்தைப்போல
தாயகமும் புலமும்
இணைந்து கிடக்கிறது.

சிரிக்கவோ அழவோ
முடியாமல்
சிதைந்து கிடக்கிறது
தமிழர் முகம்.

நனவை
கனவாக்க மறுக்கிறது
மனம்.

தாய் மண்ணில்
எம் சுவடுகளை
தின்னுகின்றன
சிங்கவேச நரிகள்

குமுறல்களைக்கூட
கொட்டவோ,மெல்லவோ
முடியாமல் திண்டாடி
நடுவழியில் நிற்கிறது கவிதை.
                                         -செல்வி-



நீளும் நினைவில்

நிமிர் வாழ்வும்
வான எல்லை தொட்டு
பூத்த அழகும்
கானல் நீரானதோ

வீழும் போதும்
துள்ளி எழும்
அதிசய இனம்
ஆளும் காலம்
மீள வரும்.

வாழும்  போதும் 
மாளும் போதும் 

மானம் காத்தவர் தன்
நீளும் நினைவில்
"விடுதலை"வென்று தரும்.
                                   _செல்வி-


செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

வன்னி மகள் பாடுகிறாள்

வன்னி மகள் பாடுகிறாள்
வாழ்விழந்து வாடுகிறாள்
அரவணைக்க தந்தையில்லை
அமுதூட்ட தாயுமில்லை
அன்புதர அண்ணன் இல்லை
யாருமற்று என்ன செய்வாள்
                                            (வன்னி)
முள்ளி வாய்க்கால் கொள்ளியிட
பள்ளி இழந்தது எங்கள் நிலம்
வெள்ளி விழப்பார்த்து விட்டால்
கள்ளி மரம் நாம் பார்ப்போம்
வெள்ளிமட்டும் விழுகிறதே
கள்ளி மரம் எங்கும் இல்லை
                                           (வன்னி)
குருவிகள் வாழ்ந்த கூடு -இன்று
கருகிப்போனது பாரு
அருவிகள் ஓடும் காடு-இன்று
கிருமிகள் வாழும் இடுகாடு
தேனும் மயிலும் வாழ்ந்த பூமி
தேரும் ஊரும் சேர்ந்த சாமி-இன்று
பாம்புகள் நெளியும் உடலமாடா-எங்கும்
பல் இளிக்கும் சடலமடா
பிறவிகள் போதும் பிறவிகள் போதும்
உறவுகள் தொலைந்த பிறவிகள் போதும்
                                                            (வன்னி)


உயிர் கயிறாக திரிகின்ற காலம்
தீ காற்றாய் வீசும் ஓலம்
குருத்துவிட குருத்துவிட
பயிர் அழிகின்ற கோலம்
பார்த்திருக்க பார்த்திருக்க
நிலம் பறிபோகும் அவலம்
                                       (வன்னி)
                                            -செல்வி-

திங்கள், 7 பிப்ரவரி, 2011

இதயப்பிழிவு

பறவைகள் வாழ்ந்த கூடு
சாம்பலாயிற்று.
கூடுகள் நிறை அழகு பூமி
இன்று சுடுகாடு .
தாய்ப்பறவை ஒன்று
குஞ்சுகளுடன்
அந்நிய மண்ணில்
தந்தையோடு இணைந்திற்று.
புதிய கூடு
வனப்புடன் உதித்தாலும்
மண் வாசமும்,
கூடிப்பறந்த பறவைகளின் நினைவும்---.
                                                         -செல்வி-
-