புதன், 9 பிப்ரவரி, 2011

வானத்தைப்போல
ஈழத்தமிழனுக்கும்
ஒளிர்வு,பேர்காரிருள்,
இடி மின்னல் வாழ்வில்.

பிரசவத்தின் போது
தாய் மரணம் நிகழ்ந்ததா?
கிழிந்து கிடக்கிறது
தமிழர் இதயம்.

ஒரு நாணயத்தைப்போல
தாயகமும் புலமும்
இணைந்து கிடக்கிறது.

சிரிக்கவோ அழவோ
முடியாமல்
சிதைந்து கிடக்கிறது
தமிழர் முகம்.

நனவை
கனவாக்க மறுக்கிறது
மனம்.

தாய் மண்ணில்
எம் சுவடுகளை
தின்னுகின்றன
சிங்கவேச நரிகள்

குமுறல்களைக்கூட
கொட்டவோ,மெல்லவோ
முடியாமல் திண்டாடி
நடுவழியில் நிற்கிறது கவிதை.
                                         -செல்வி-கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக