சனி, 19 பிப்ரவரி, 2011

காலை மலர்ந்தது

சேவல் கூவி விடியல் அறிவிக்க,
பறவைகளின் ஆரவாரம் காதினில் இசைக்க,
கிழக்குவானிலே கதிரவன் உதயமாக.
மக்கள் துயில் களைந்து 
காலைக்கடன் கடந்து
தொழிலுக்கும்,பள்ளிக்குமாய் விரைய,
பூக்கள் விரிந்திட,பச்சை வயல்கள் சிலிர்த்திட,
புள்ளினங்கள் இரை தேடிச்செல்ல ,
குளக்கரையை தாமரை அழகு செய்ய,
ஆவினங்கள் களனி தேடிச் செல்ல
இரசிக்க கண்கள் இரண்டு போதுமா?

                                                               -சு.சுருதி-    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக