செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

தாயே!விதையாக போன பிள்ளைகளுக்கு துணையாக இரு தாயே.

இதயம் வெந்து துடிக்கிறது- தாயே
உந்தன் துயர் செய்தி கேட்டு.-என்றும் 
அப்பாவின் தயவில் வட்ட முகத்தில் 
முழுநிலா பொட்டு வைத்து 
புன்சிரிப்போடு இருப்பாயே.
தள்ளாத வயதிலும் 
கயவரால் மானச் சிறை இருந்தீர்.
அப்பா பறவையும் பறந்துபோக 
தாயே!ஐயோ தனிமை உன்னை வாட்ட
மனதில் என்ன நினைத்திருப்பீர்.
சொந்த ஊரில் ,அப்பாவின் கோவிலுக்கு அருகில்
தாயே நீங்களும்-------------
தாயே!விதையாக போன பிள்ளைகளுக்கு
துணையாக இரு தாயே.

                                               -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக