வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

முரண்

புத்தகத்தை பிரித்தேன்
ஒற்றுமை பாடம் கற்க

கரும் பலகையில்
வெள்ளையால் கிறுக்கினார் ஆசிரியர்
மாணவரோ
வெள்ளைத்தாளில் கறுப்பால் கிறுக்கினர்

அமைதியாக இருங்கள்
உரக்க சத்தமிட்டார்
ஒழுக்காற்று ஆசிரியர்

"வலி"தாங்கமுடியாமல்
வைத்தியசாலை செல்ல
ஊசியைப்போட்டார் தாதி

கவலையை மறக்க குடிக்கிறாராம்
அதைப்பற்றியே விலாவாரியாய்
வெளுத்துக்கட்டுகிறார் குடிகாரர்

சிகரட் புகையை
ஊதி ஊதி விட்டபடி
கரிசனையாய்ப் படிக்கிறான் வெள்ளையன்
சூழல் மாசுபடலை தவிர்ப்போம்

என்னடா சத்தம்
அமைதிக்கான பிரார்த்தனை நடக்கிறதாம்

விழுந்தவனை
மாடு ஏறி உழக்குகிறது 
விழாதவனை பட்ஜெட் விழுங்குகிறது

மீசையை முறுக்கியபடி
பிரம்படி போட்டு பாடம் நடத்தினார்
தலைமை ஆசிரியர்
"கருணையோடு இருங்கள்"
"எல்லோரிடமும் அன்புசெய்யுங்கள்  "

சாமாதானதிட்கான யுத்தமாம்

                                                              -செல்வி-

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக