செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

உப்பிட்டவரை உள்ளளவு நினை

அந்த ஆலமரத்தின் கீழ் மூன்று சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது ஒரு பறவை வேடன் எய்திய அம்பிற்கு இரையாகி உயிருக்கு 
போராடிக்கொண்டிருந்தது.இதைக்கண்ட நண்பர்கள் அப்பறவை மீது 
இரக்கப்பட்டு அதற்கு தங்களாலான முதலுதவி செய்து காயம் மாறும்வரை 
வீட்டில் பராமரித்து பின் அதனை பறக்கவிட்டனர்.அந்த பறவை அவர்களை 
பார்க்க அடிக்கடி வந்து போகும்.ஒவ்வொருதடவையும் அவர்கள் தோள்மீது
மாறி,மாறி இருந்து கீ கீ என சந்தோசம் ஊட்டும்.இடர் வரும்போது செய்யும்
உதவி உண்மை நட்பை தரும்.

                                                                     சு.சுருதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக