புதன், 16 பிப்ரவரி, 2011

வானம் ஒரு நாள் பூமிக்கு வந்தது

வானம் ஒரு நாள் பூமிக்கு வந்தது.
வானுயர்ந்த சோலைகளை
தோழமைக்கு அழைத்தது.
கர்ணன் உயிரிழந்தபோது
செந்நிறமாகியது வானம்
கர்ணனை காப்பாற்றா
வானுயர் சோலை களின்
உறவை வெறுத்தது வானம்.
கர்ணனின் தேசம் அழும் ஒலி
வானத்தினுள் மட்டுமல்ல ,
வியர்வையால்,கண்ணீரால்,
குருதியால் உப்பேறிய
பாசக்கடலிலும் நுழைகிறது.
பரிதவிப்பாய்,கொந்தளிப்பாய்.
                                                        -செல்வி-

1 கருத்து:

  1. //கர்ணனை காப்பாற்றா
    வானுயர் சோலை களின் உறவை வெறுத்தது வானம்//.
    நன்றாக இருக்கிறது எண்ணங்கள் ..வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு