சனி, 12 பிப்ரவரி, 2011

யார் இவர்கள்

யார் இவர்கள்
இந்த மண்ணின் மொழியை
இவர் கதைக்கவில்லை
இந்த மண்ணின்
கடவுள்களை வழிபடவுமில்லை
மாறாய்
புது மொழியோடு
தம் வழிபாட்டு இடங்களை ,
தம் அடையாளங்களை நிறுவுகிறார்கள்
யார் இவர்கள்
இவர்களுக்கும்
இந்த மண்ணுக்கும்
எந்த தொடர்புமில்லை
பூர்வீக மக்களை
அடிமையாக்கி
தம் தேவைக்கு
பணமோ,காணியோ.
பொருள்களையோ பறிக்கிறார்கள்
யார் இவர்கள் .
ஏன் இங்கு வந்தார்கள்

நீறுபூத்த நெருப்பாய்
இந்தக்கேள்வி
யார் இவர்கள்
                       -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக