ஞாயிறு, 26 மே, 2013

WAR JOURNEY

மலரவனின் போர் உலா என்ற பயனக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு பென்குயின் பதிப்பகத்தால் WAR JOURNEY என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.ஏற்கனவே போர் உலா என்ற நூல் ஐந்து தடவைகள் அச்சிடப்பட்டு வெளியாகியிருந்தது.போர் உலா இலங்கை இலக்கியப்பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான  இலக்கியத்தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றது.இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவம் கட்டைக்காட்டில் இருந்து ஆனையிறவு முகாம் நோக்கி இராணுவ நடவடிக்கையின் (பலவேகயா 2- 1992) இராணுவ ஆய்வை மலரவன் செய்யப்பணிக்கப்பட்டு   அவன் அதை பூர்த்தி செய்திருந்தான்.
அந்த ஆய்வு மிக அழகாக செய்யப்பட்டிருந்ததாக தலைவர் அவர்களால் சொல்லப்பட்டது.இராணுவம்,புலிகளின் பலம் பலவீனம் அவ்ஆய்வில் வெளித்தெரிவதால் அந்த ஆவணம் நூல் ஆக்கப்படவில்லை. மலரவன்  யாழ் மாவட்ட இராணுவ அறிக்கைப்பொறுப்பாளனாய்  நியமிக்கப்பட்டான்.


சு.செல்வி   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக