வியாழன், 2 ஜூன், 2011

யமன் வருவது மிருகங்களுக்கு தெரியுமாம் முன்னோர் சொல்வார்கள்







யமன் வருவது 
மிருகங்களுக்கு தெரியுமாம் 
முன்னோர் சொல்வார்கள் 

சேவல் எப்போது
விடியலுக்காய் கூவும்?
விடியாத தேசமாய் 
எம் தேசம் மாளுமா?

                                          -செல்வி-  

புதன், 1 ஜூன், 2011

இன்று சுடலையும், சாக்குருவியும்




மண்  வாசம்
கிராமிய நளினம்
பாச உறவு
இயற்கையின் தாலாட்டு
அன்று
எங்களின் சொத்து
இன்று
சுடலையும்,
சாக்குருவியும்
இராணுவச் சப்பாத்தும்
இங்கும் அங்கும்

    
               
                                 -செல்வி-

உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்தீர்




உழைத்து உழைத்து 
ஓடாய்த்தேய்ந்தீர் 
உழைப்பிட்கு ஏற்ற 
ஊதியமின்றி 
காலங்கள்தான் கழிந்தது
லயன்களை தாண்டி 
வாழ்க்கை இல்லை 
வசந்த பூமியில்
வசந்தங்கள் உமக்கு 
சொந்தமில்லை 
அரசியல்வாதிகள்
வாய்க்கு அரிசிதான் 
போட்டார்கள் 
21 ஆம் நூற்றாண்டில் 
கொடுமைகளின் 
சாட்சி நீங்கள் 

                                 -செல்வி-  

மண்ணின் வேர்களை பிடுங்கி களைகளை நடுகிறார் மண்ணின் எதிரிகள்



எங்கள் வாழ்வின்
இதமான நாட்கள் 
எங்கள் மண்ணில் 
கூடியிருந்த நாட்களே 

மண்ணின் வேர்களை பிடுங்கி
களைகளை நடுகிறார்
மண்ணின் எதிரிகள் 

மண்ணின் செழிப்பினை
அபகரித்து
கொதி புண்ணாய்
மாற்றுறார் எதிரிகள்
                                    -செல்வி-