வெள்ளி, 18 மே, 2012

எச்சில்/பிச்சைப்பிசாசுகளை காலம் மன்னிக்காது






முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு 
மட்டுமல்ல 
அனைத்து படுகொலைகள்,கடத்தல்கள் ,
கற்பழிப்புகள்,சிங்களமயமாக்கல்அனைத்திற்கும் 
சிங்கள அரசை போன்று 
அத்தனை பொறுப்புகளும் 
ஒட்டுக்குழுக்கள்/கூலிப்படைகளுக்கும்
உள்ளது
காலம் இவர்களை மன்னிக்காது 
எச்சில்/பிச்சைப்பிசாசுகளை 
விடுதலைக்கு காவுபோன 
அத்தனை உயிர்களும் தண்டிக்கும் 



வியாழன், 17 மே, 2012

முள்ளிவாய்க்கால் நினைவு நெஞ்சை குடைகிறது






முள்ளிவாய்க்கால் நினைவு 
நெஞ்சை குடைகிறது 
விடுதலை தேசம் சிறைப்பட்டது 
ஏதுமறியாமல் பிஞ்சுகள் இறந்தன
மக்களோடு,வீரர்களோடு 
பூத்துக்குலுங்கிய வாழ்வு 
மயானத்தை வென்றிற்று
அடிமையாய் வாழ்வு சபிக்கப்பட்டது    

ஞாயிறு, 13 மே, 2012

இன்று அன்னையர் தினம்



இன்று அன்னையர் தினம் 
ஈழத்தில் எங்களில் பலருக்கு 
தெரிந்திருக்க நியாயமில்லைத்தான் 
அன்னை மனிதத்தின் மூலம் 
இறைவனின் அற்புதபடைப்பு 
இங்கு பல பிள்ளைகளுக்கு 
உயிரோடு அன்னையில்லை 
பல அன்னைகளுக்கு 
உயிரோடு பிள்ளைகளில்லை 
ஈழத்தில் பலருக்கு இன்று 
அன்னையர் தினம் என்று 
தெரியாமல் இருப்பது நல்லது   

சனி, 12 மே, 2012

இது சிங்கள தேசத்தின் உண்மைக்கொடியாகிறது

Posted Image

தயவுசெய்து 
ஒரு நாட்டின் கொடியை
அவமதிப்பதட்காய் 
மன்னித்து விடுக- எனினும் 
இது சிங்கள தேசத்தின் 
உண்மைக்கொடியாகிறது 
என்ன செய்வது 
சோற்றினுள் 
பூசணிக்காயை மூடமுடியவில்லை