செவ்வாய், 17 மே, 2011

வினை விதைத்தவன் வினை அறுப்பான்



சிறுவர் உரிமை பேசுபவர் எங்கே?
எம் சொந்த நிலத்தில்
அந்நியர் வந்து 
சிறுவர்,பெண்கள் என 
தடுத்து வைக்க 
உரிமை வழங்கியது யார்?

பாலர்களுக்கு
பிணவாழ்வை காட்டியது யார்?
அவர் மனங்களில் படிந்த 
கொடும் துயரை யார் கழுவுவார்?
உங்கள் ஊரில் ஒரு சட்டம்
இங்கு ஒரு சட்டமா?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் 

                                                            -செல்வி- 

கொடிய நாட்களின் துயர் விடியல் வந்தாலே தீரும்




நேற்றுப்போல் இருக்கிறது
இதயம் வெடித்துவிடும் போலும் இருக்கிறது
இறுகிய இதயம்
இனி இறுக முடியா அளவில்
சிறுத்து
கல்லுப் போலும் இருக்கிறது 
நாய் இறந்தாலே 
கவலையோடு அடக்கம் செய்யும் இனம்
தாய் பிள்ளைகளை பறிகொடுத்து ,
அடக்கமும் செய்யாமல்
அந்தரித்து நிற்கிறது 
கொடிய நாட்களின் துயர்
விடியல் வந்தாலே தீரும்

                                                -செல்வி- 

திங்கள், 16 மே, 2011

நாம் சிரிக்கும் காலத்தை பாருங்கள்



எங்களில் இருந்து 
மனிதன் முன்னேறியது உண்மை
ஆனால்
சிங்களவன் 
பின்நோக்கித்தான் போனான்
அவனைப்பார்த்து 
நாம் சிரிக்கும்
காலத்தை பாருங்கள் 

                                        -செல்வி- 

ஞாயிறு, 15 மே, 2011

வளரும் போதே பொசுக்குவோம்

2


சாவில் இருந்து
மயிரிழையில் தப்பினாலும்
எம் வதையில் இருந்து
தப்ப முடியாது 
தமிழர்களை 
ஒரு கை பார்ப்போம் 
வளரும் போதே பொசுக்குவோம் 
உங்களை வாரி அணைப்பதுபோல் 
உலகிற்கு காட்டியே
காட்டிக்கொடுக்கும் 
தமிழனுடன் சேர்ந்து 
உங்களை உய்ய விடமாட்டோம் 
மகிந்தர் மட்டுமல்ல 
எந்த சிங்கள தலைவனும் 
உங்களில்த்தான் சவாரி செய்வான் 

                                                                    -செல்வி-