ஞாயிறு, 22 மே, 2011

வரலாறு காயங்களால் நிரம்பியிருக்கிறது

யுத்த வெற்றிக் கொண்டாட்டம்

எம் பூர்வீக மண்ணில்
ஆக்கிரமிப்பு சின்னம்-அதற்கு
வெற்றிக்கொண்டாட்டம் வேறு
ஒரு மண்ணின்,இனத்தின் அழிவில்
அடுத்தவருக்கு கொண்டாட்டம்
அழிந்த இனத்தின் 
எச்சங்களுக்கு வாழ்வே திண்டாட்டம் 
வரலாறு 
காயங்களால் நிரம்பியிருக்கிறது 

                                                      -செல்வி-

சனி, 21 மே, 2011

தலை கீழ் வாழ்வு




அழகிய எங்கள் வாழ்வு
தலை கீழாய் போனது 
மங்களம் நிறை சிறப்பு
அமங்கலமாயிற்று 
பிறப்பு 
இறப்பாயிற்று 

                                           -செல்வி-


வரலாறு சொல்லி அழுகிறது




அரசு -தமிழர் கூட்டமைப்பு 
பேச்சுவார்த்தை 
உலகை ஏமாற்ற 
சிங்களத்தின் நாடகம் 
சிங்களம்
பேச்சுவார்த்தையிலோ
விசாரணை குழு அமைப்பதுலோ
பின்னிற்பதில்லை
இதுவரை 
இவற்றால் 
எந்தப்பலனும் கிடைத்ததில்லை 
வரலாறு சொல்லி அழுகிறது 
ஏமாறுவோர் இருக்கும் வரை
ஏமாற்றுவோர் உயிர் வாழ்வார்
வருமுன் காப்போம்  
                                                    -செல்வி-

ஐயோ ! இன்று நாம் அடிமைகள்






















இடர் சுமந்து இடம்பெயர்ந்த

அந்த கொடிய நாட்கள்
உயிரை கையில் பிடித்த வாழ்வு
உயிர் குடித்த பின்னும் ஓயவில்லை

சொந்த நிலத்தில்
இந்தக்கொடுமை
யாருக்கும் வரவேண்டாம்
காவிய சொத்துக்களையும்,
உயிர்களையும்
சிங்களத்திற்கு பலிகொடுத்தோம்
ஐயோ ! இன்று நாம் அடிமைகள்

                                                   -செல்வி-