சனி, 14 மே, 2011

எங்கள் பூர்வீக மண் தவிக்கிறது ஆறாத காயங்களுடன்



எங்களின் வளங்கள்
சிங்களத்தால் காவுகொள்ளப்பட்டன
எஞ்சியவை 
சிங்களத்தால் 
அந்நிய நாடுகளுக்கு 
விற்கப்படுகின்றன 
எங்கள் பூர்வீக மண்
தவிக்கிறது
ஆறாத காயங்களுடன் 
                                                 -செல்வி- 

நிலத்திலும்,நீரிலும் ஓடுகிறது பேருந்து





நிலத்திலும்,நீரிலும்
ஓடுகிறது பேருந்து
துடுப்பற்று
நடுக்கடலில் நிற்கிறது
எங்கள் வாழ்வு 
எதுவும் நடக்கலாம் 
பிரகடனப்படுத்தாத 
இராணுவ சர்வாதிகார ஆட்சி 
உலக வளர்ச்சிக்கு 
எதிர்மறையாய் செல்கிறது 
ஊசலாடும் 
எம்வாழ்வின் நீட்சி    

வியாழன், 12 மே, 2011

நடுக்கடலில் நிற்கிறது எங்கள் வாழ்வு




நிலத்திலும்,நீரிலும்
ஓடுகிறது பேருந்து
துடுப்பற்று
நடுக்கடலில் நிற்கிறது
எங்கள் வாழ்வு 
எதுவும் நடக்கலாம் 
பிரகடனப்படுத்தாத 
இராணுவ சர்வாதிகார ஆட்சி 
உலக வளர்ச்சிக்கு 
எதிர்மறையாய் செல்கிறது 
ஊசலாடும் 
எம்வாழ்வின் நீட்சி    

                                                      -செல்வி- 

புதன், 11 மே, 2011

ரோமாபுரி அழகுதான்




ரோமாபுரி அழகுதான் 
வரலாறு பாடும் அழகு
அதைப்பார்க்க 
கண்கள் கோடி வேண்டும்  
அழகாய் எழுத 
கைகளும் கோடி வேண்டும்
எங்களுக்கோ 
இருக்க 
வீட்டுக்கோடி கூட இல்லை 
இயற்கைகளையே 
வீம்பாய் பொசுக்கினான் 
சிங்களன் 
சொத்துக்களை 
களவாடினான் மகிந்த
என்தேசத்தைப் பார்க்க
தயவுசெய்து 
கண்களே வேண்டாம்
துயர் போதும்