புதன், 9 மார்ச், 2011

காலை விடிவதும் மாலை மறைவதும் எங்கள் ஊரில்த்தான் அழகு என்கிறாள் சின்ன மகள் இரவின்

காலை விடிவதும்
மாலை மறைவதும்
எங்கள் ஊரில்த்தான் அழகு
என்கிறாள் சின்ன மகள்
இரவின் நிலாவொளி
எங்கள் ஊரில்த்தான் அழகு
என்கிறாள் பெரிய மகள்
எங்கள் ஊர்தான் அழகு
என்கிறது என்மனம்
யார் தான் சொல்வார்கள்
தாயை விட சிறந்தது உளது என்று.
                                                     -செல்வி-

சூரியனைக் காணவில்லை நிலவு வர காரணமில்லை ஏங்கி ஏங்கி வாழுகின்றோம் இருள் சூழ்ந்த

சூரியனைக் காணவில்லை
நிலவு வர காரணமில்லை
ஏங்கி ஏங்கி வாழுகின்றோம்
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே
அருகெங்கும் புடையன்கள்
இருப்பவரை/இறந்தவரை தெரியவில்லை.
எத்தனை நாள் துயர் சுமப்போம்?

                                                      செல்வி  

காலத்தில் பயிர் செய் -பதிவு நூறு

கூரை அற்று வீடு 
நிலம் எங்கும் கறையான்
புத்தகப் பெட்டிக்குள்ளும் 
இறங்குகிறது-காலம் பொன்னானது.
காலத்தில் பயிர் செய் 
புத்தகங்களை காப்பாற்று
வருமுன் காத்தலே நன்று 
சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் 

                                                                 -செல்வி-
   

செவ்வாய், 8 மார்ச், 2011

வாழ்க்கையின் அழகு குழந்தைச் செல்வமே.


மழலை மொழியில் ஆயிரம் பூக்கள் அழகு
   மழலையின் சிரிப்பு மத்தாபூக்களிலும் அழகு 
பிஞ்சுப்பாதங்க்ளின் மென்மை பஞ்சிலும் இல்லை
வாழ்க்கையின் அழகு குழந்தைச் செல்வமே.          

                                                                                             செல்வி