ஞாயிறு, 15 ஜனவரி, 2012

விடியாத தேசத்தில் விழி மூடாது காத்திருக்கிறேன்விடியாத தேசத்தில்
விழி மூடாது காத்திருக்கிறேன்
விடியும் கனவோடு
விழிமூடிய வீரர் நினைவில்
விழிநீரால் நீர் இறைக்கிறேன்
விழிப்பாயா தமிழா?
விடுதலைக்கு உழைப்பாயா?
என்று கேட்கமாட்டேன்
பானை பொங்கும் போது கூட - நீ
புலியாகி அணிசேராமல் ஒளித்ததால்
பொங்காமல் போயிற்று
தமிழர் வாழ்வு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக