செவ்வாய், 17 ஜனவரி, 2012

எங்களுக்கு எல்லாம் கனவுதான்பறவைகள் போல்
என் எண்ணங்கள் பறக்கின்றன
சிதறுகின்றன
தினம்
கை கால் அற்றவரை
தரிசிக்கும் வாழ்வு
கூடவே
வீதிகளில் அந்நியரையும்
கோடரிக்காம்புகளையும் .
முடிக்கப்படா கணணி அறிவுடன்
வேறு என்ன செய்ய முடியும்?
நம்பிக்கை துரோகர்களை
தாண்டிச்செல்கையில்
அந்நிய தேச ஆசையும் வருகிறது
எங்களுக்கு எல்லாம் கனவுதான்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக